என் மலர்
உள்ளூர் செய்திகள்

உலக நலனுக்காக 108 சுமங்கலி பெண்களின் குத்து விளக்கு பூஜை
- 108 சுமங்கலி பெண்களின் குத்து விளக்கு பூஜை, நேற்று நடைபெற்றது.
- மங்கலி பெண்கள் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றி உலக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.
ஓசூர்,
ஒசூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தம்ப்ராஸ்) கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில், உலக மக்கள் நலனுக்காக 108 சுமங்கலி பெண்களின் குத்து விளக்கு பூஜை, நேற்று நடைபெற்றது.
ஓசூர் பழைய ஏ.எஸ் டி..சி.பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் சுதா நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றி உலக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.
மேலும் இதில், மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ராகவன், ரோகினி கணேஷ், நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு. பின்னர், அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






