என் மலர்
நீங்கள் தேடியது "உயர்கல்வி உதவித்தொகை"
- பெற்றோரை இழந்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமாகும்.
- மொத்தம் ரூ.94.94 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுளளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை சுயசார்புடையவர்களாக செய்து, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களின் வாழவில் மற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், ஏழை, எளிய மாணவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் நோக்கில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் கூறுகையில், ஐவிடிபியின் கல்வி பணிகளில் முதன்மையானது பெற்றோரை இழந்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமாகும்.
அதன்படி பெற்றோரை இருவரையும் இழந்த மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஒருவரை இழந்த மாணவர்களுக்கு ரூ.7,500 என வழங்கி வருவதுடன், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு கல்வி உதவித்தொகையாக ரூ.7,500 வழங்கி வருகிறோம்.
அதன்படி, இந்த கல்வியாண்டில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.13.60 லட்சம், திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.7.50 லட்சம், ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.14.60 லட்சம், கிருஷ்ணகிரி புனித லூயிஸ் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு ரூ.1.10 லட்சம், வேலூர் அக்சீலியம் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.9.80 லட்சம், வேட்டவலம் லயோலா கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.16.52 லட்சம், மெட்டாலா லயோலா கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 லட்சம், கீரனூர் தொன் போஸ்கோ இளைஞர் கிராம மாணவர்களுக்கு ரூ.4 லட்சம், பர்கூர் செயின்ட் ஜோசப் உடல் மற்றும் சமூக நல மைய மாணவர்களுக்கு ரூ.3.60 லட்சம், எலத்தகிரி கொன்சாகா கல்லூரி மாணவிகளுக்கு ரூ.4.80 லட்சம், தர்மபுரி தொன்போஸ்கோ கல்லூரி மாணவர்களுக்கு ரூ.8.90 லட்சம், ஏலகிரி தொன்போஸ்கோ கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.42 லட்சம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1.60 லட்சம், சேலம் பாகல்பட்டி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களுக்க ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.94.94 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுளளது. இந்த கல்வி உதவித்தொகையைப் பயன்படுத்தி மாணவர்கள் உயர் கல்வியை சிறப்புடன் முடித்து, பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மேலும், இக்கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.3.96 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






