என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி பகுதியில் குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்
    X

    போச்சம்பள்ளி பகுதியில் குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்

    • குரங்குகளுக்கு பயந்து ஜன்னல் கதவுகள் போடப்பட்டு இருந்தாலும், அவற்றை உடைத்து உள்ளே புகுந்து எடுத்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
    • கிராமத்தில் உள்ள குரங்குகளைக் கூண்டு வைத்து பிடித்து தொகரப்பள்ளி அல்லது செங்கம் காட்டில் விட கோரிக்கை விடுத்துள்ளனா்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சில குரங்குகள் தஞ்சமடைந்த ன. தற்போது அந்த மரத்தில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.

    இந்த குரங்குகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள் மற்றும் துணி மணிகள், புத்தகங்கள் உள்ளிடவற்றை எடுத்து சென்றுவிடுகின்றன. குரங்குகளுக்கு பயந்து ஜன்னல் கதவுகள் போடப்பட்டு இருந்தாலும், அவற்றை உடைத்து உள்ளே புகுந்து எடுத்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்தும் இந்நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், மேலும் கிராமத்தில் உள்ள குரங்குகளைக் கூண்டு வைத்து பிடித்து தொகரப்பள்ளி அல்லது செங்கம் காட்டில் விட கோரிக்கை விடுத்துள்ளனா்.

    Next Story
    ×