என் மலர்
கிருஷ்ணகிரி
- அனைத்து கழிவுகளை யும் கழிவு, குப்பைகளை 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டி வருகின்றனர்.
- இதனால் ஊத்தங்கரை- கல்லாவி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே ஊணாம் பாளையம் கிராமம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி பகுதியில் இருந்து தினந்தோறும் வெளியேற்றப்படும் கோழிகடை கழிவுகள், ஆட்டுக் கழிவுகள், பொதுமக்கள் அன்றாடம் வெளியேற்றப்படும் குப்பைகள், மருத்துவ கழிவுகள் என அனைத்து கழிவுகளை யும் கழிவு, குப்பைகளை 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டி வருகின்றனர்.
இதனால் இந்த கிராமத்தில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை கொளுத்தி விடுவதாகவும் அதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் பல முறை புகார் கூறியும் இதுவரை எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊணாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊத்தங்கரை- கல்லாவி சாலையில் ஊணாம் பாளையம் கிராமம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊத்தங்கரை- கல்லாவி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா ஆகியோர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் முழுமையாக குப்பைகளை அகற்ற அதிகாரப்பூர்வமான நம்பிக்கை ஏற்படும் வகையில் எழுதிக் கொடுக்கும் பட்சத்தில் சாலை மறியலை கைவிடுவதாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.
- அதே பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் வயது (27) மாது (26), நடராஜ் (27) இந்த மூன்று பேரும் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர்.
- கோபி தட்டி கேட்டு, மெதுவாக செல்ல வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாஸ்கர் தாஸ் பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் கோபி (வயது 21). இவர் தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் வயது (27) மாது (26), நடராஜ் (27) இந்த மூன்று பேரும் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். இதனை கோபி தட்டி கேட்டு, மெதுவாக செல்ல வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.
இதனால் ஏற்படத்த தகராறில் 3 பேரும் கோபியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கோபி கொடுத்த. புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி கோவிந்தராஜ், வரதராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- போலீசார் மாரிமுத்து, அவரது மனைவி பஞ்சு (38) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சளகிரியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் அர்ஜூன் (வயது 17). கூலித் தொழிலாளி. இவரது உறவினர் கோவிந்தராஜ் (28).
இந்த நிலையில் இவர்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில், அர்ஜூனும், அவரது தந்தை மாரிமுத்துவும் தாக்கப்பட்டனர். அது குறித்து அர்ஜூன் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோவிந்தராஜ், வரதராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதே போல வரதராஜ் மற்றொரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன் பேரில், போலீசார் மாரிமுத்து, அவரது மனைவி பஞ்சு (38) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இயற்கை உபாதை கழிக்க வந்தபோது 2 காட்டுயானைகள் சத்தம் போட்டது.
- காட்டுயானைகள் அகரம் அருகே உள்ள மறுதேரி ஏரியில் உள்ளது
மத்தூர்:
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் 2 காட்டுயானைகள் வெளியேறி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மோட்டுப்பட்டி அருகேயுள்ள மலை அடிவாரத்திற்கு இன்று காலை வந்தது.
அப்போது அந்த பகுதிக்கு பாரூர் அருகே உள்ள காட்டுகொலை கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார் (வயது27) என்பவர் இயற்கை உபாதை கழிக்க வந்தபோது 2 காட்டுயானைகள் சத்தம் போட்டது.
அப்போது அந்த யானைகளுடன் தனது செல்போனில் செல்பி பிடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த காட்டுயானைகள் ராம்குமாரை துரத்தியது. இதில் ஓட முடியாமல் அவர் தவறி விழுந்தார். அதனால் அந்த யானைகள் அவரை காலால் மிதித்து கொன்றது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். யானைகள் தாக்கி இறந்த ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த காட்டுயானைகள் அகரம் அருகே உள்ள மறுதேரி ஏரியில் உள்ளது. மேலும் வனத்துறையினர் அந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- மாந்தோப்பில் நேற்று அசோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள சாமந்தமலை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 5 வருடமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அசோகன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
நேற்று அதே பகுதியில் ரைஸ்மில் அருகே உள்ள மாந்தோப்பில் நேற்று அசோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பொடுத்தம்பட்டி அருகே மின் கம்பத்தில் ஏறி பேனர் கட்டும் பொழுது தவறி கீழே விழுந்தார்.
- இதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ரெயில்வே நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது24). மேஸ்திரியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
நேற்று பொடுத்தம்பட்டி அருகே மின் கம்பத்தில் ஏறி பேனர் கட்டும் பொழுது தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி பலியானார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஜெய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலவந்திரம் (வயது23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- 4 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 352 குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜுவாடி சோதனை சாவடியில் சிப்காட் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
4 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 352 குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். குட்கா பொருட்களை கடத்திய பெங்களூருவில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலவந்திரம் (வயது23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ராகுல் தப்பி ஓடிவிட்ட நிலையில் அவரைத் தேடி வருகின்றனர்.
- சின்ன வட்டார பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார்.
- நேற்று சின்ன வட்டாரப்பகுதி ரைஸ் மில் அருகே உள்ள மாந்தோப்பில் காசிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிராஜா (வயது24). லாரி டிரைவரான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே சின்ன வட்டாரப்பள்ளி பகுதியில் குடியிருந்து வந்தார்.
இவர் சின்ன வட்டார பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் காசிராஜா மனமுடைந்து காணப்பட்டார்.
இதனால் நேற்று சின்ன வட்டாரப்பகுதி ரைஸ் மில் அருகே உள்ள மாந்தோப்பில் காசிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- வீட்டில் யாரும் இல்லாத போது அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே மிட்டாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அஸ்வினி. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் அகிலா அவருடன் பேச மறுத்துள்ளார்.
- விவேக் நேற்று அகிலாவின் வீட்டிற்கு சென்று அகிலாவுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அலிஸ் அகமது. இவரது மனைவி மாலிகா. இவரது மகள் அகிலா (வயது22). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அப்போது இவருடன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த விவேக் (29) வாலிபர் பணிபுரிந்து வந்துள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் அகிலா அவருடன் பேச மறுத்துள்ளார்.
இதனால் விவேக் நேற்று அகிலாவின் வீட்டிற்கு சென்று அகிலாவுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளார். கழுத்து முகம் உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து பட்ட அகிலாவை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் அகிலா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விவேக்கை கைது செய்தனர்.
- சுமார் 1 மணி நேரத்திறகு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
- டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டது என தெரியவந்தது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கொசமேட்டை சேர்ந்தவர் சபீர். கூலி தொழிலாளி. இவரது மகன் சபாஷ் (வயது3). நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை திடிரென மாயமானது.
இதனால் பெற்றோர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது வீட்டின் பின்புறம் உள்ள எள்ளூகுட்டை ஏரியில் குழந்தை மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கிருஷ்ணகிரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் குழந்தையை தேடினர்.
சுமார் 1 மணி நேரத்திறகு பிறகு தீயணைப்பு படையினர் குழத்தையை அனைத்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டது என தெரியவந்தது.
இதுகுறிந்து, காவேரிப்பட்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டு அருகே விளையாடி, கொண்டு இருந்த குழந்தை ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்று பெரியண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது45). இவர் ஓசூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று தளிசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பெரியண்ணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பெரியண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






