என் மலர்
கிருஷ்ணகிரி
- கடந்த 12-ம் தேதி தீர்த்தமலையில் உள்ள கோவில் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
- ஊத்தங்கரை போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கரகப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி.இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியா நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பன்னிக்குளம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்று ஐயப்பன் (வயது19) என்பவர் திருமணம் செய்ய கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது .
இதையடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூங்கிலேறி பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி.
இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி தீர்த்தமலையில் உள்ள கோவில் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கம் விசாரித்ததில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மருதுப்பட்டி மோட்டூர் பகுதிய சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23) என்பவர் கடத்திச் சென்றதாக தெரிய வந்தது.
இது குறித்து ஊத்தங்கரை போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நத்தம் கிராமத்திலும் தொடர்ந்து மூன்று நாட்களாக 3 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.
- போலீசாரிடம் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஆனது கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அருகில் எல்லைப் பகுதி அமைந்திருக்கிறது.
இதனால் இப்பகுதியில் அதிக அளவில் ஆடு மாடுகள் பொதுமக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அனைத்து வீடுகளிலும் ஆடு, மாடுகளை விவசாயிகள் பெருமளவில் வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீடுகளில் வளர்க்கும் ஆடு மாடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் சிலர் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் திருடி செல்வது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கத்திரிப்பள்ளி கிராமத்தில் முருகேசன் என்பவருடைய ஒரு பசு மாடும், அதே கிராமத்தில் சோபா என்பவருடைய 2 பசு மாடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பண்ணப்பள்ளி கிராமத்தில் திம்மக்கா என்பவருடைய பசுமாட்டை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் இதேப்போல் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உண்டிகை நத்தம் கிராமத்திலும் தொடர்ந்து மூன்று நாட்களாக 3 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் போலீசாரிடம் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் புகார்களை மட்டும் பெற்றுக்கொண்டு மௌனமாக இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் உடனடியாக ஆடு மாடுகளை திருடி செல்லும் மர்ம கும்பலைப் உடனடியாக பிடிக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து ஆடுகள் மாடுகள் திருடு போவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் அச்சத்தில் இரவு தூங்காமல் காவல் காத்து வருகின்றனர்.
- போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
- சிலம்பரசனுக்கும், குமாரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டபள்ளி காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க நேற்று ஓசூர் ராம் நகர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி குமார் (வயது 29) என்பவர் வேலூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-
பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஓசூர் பஸ் நிலைய பகுதியை சேர்ந்த திம்மராயப்பா மகன் சிலம்பரசன் (28) என்பது தெரியவந்தது.
இவர் பத்தலபள்ளியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கொலையான சிலம்பரசனும், குமாரும் நண்பர்கள் ஆவர்.
இந்த நிலையில் சிலம்பரசனுக்கும், குமாரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறி அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதனை அறிந்த குமார் கோபமடைந்து நண்பர் சிலம்பரசனை கண்டித்தார்.
ஆனால் சிலம்பரசன் கள்ளதொடர்பை கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குமார், சிலம்பரசனை கட்டையால் பயங்கரமாக அடித்துக்கொலை செய்து விட்டு பேரண்டபள்ளி காட்டுப்பகுதியில் உடலை வீசி சென்றது தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓசூர் பகுதியை சேர்ந்த சதீஷ், மணிகண்டன், மஞ்சு என்பதும் அவர்கள் மூவரும் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
- இவர்கள் ஏற்கனவே இரண்டு இடங்களில் கொள்ளை நடத்தியதும் தெரியவந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோகுல் நகர் பகுதியில் சந்தேகப்படு ம்படியாக 3 நபர்கள் சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார், அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ராயக்கோட்டை மற்றும் ஓசூர் பகுதியை சேர்ந்த சதீஷ், மணிகண்டன், மஞ்சு என்பதும் அவர்கள் மூவரும் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், ஆண்கள் வேலைக்கு சென்ற பின் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு வீடு வாடகைக்கு கேட்பது போல் வீட்டிற்குள் புகுந்து பெண்களை கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுவருவதும், இவர்கள் ஏற்கனவே இரண்டு இடங்களில் கொள்ளை நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய கத்தி, கயிறு போன்ற ஆயுதங்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மூவரையும் தைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மனுக்களை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
- மின்சார வசதி, போக்குவரத்து வசதி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவுள்ளது
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம், பாகலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஓசூர் தொகுதிக்குட்பட்ட பாகலூர், பெலத்தூர், பாலிகானபள்ளி உள்ளிட்ட 32 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல் நேரத்திலும், அதற்கு முன்பாகவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். அதனடிப்படையில், அவர் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற ஒரு துறையை உருவாக்கி அத்துறை மூலம் அனைத்து கோரிக்கைகளின் மீதும் தனிக் கவனம் செலுத்தி தீர்க்கப்படக்கூடிய கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றி தந்துள்ளார்.
தமிழக முதலமைச்சரிடம் மனு அளித்தால், அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. இன்று ஓசூர் தொகுதிக்குட்பட 32 ஊராட்சிகளில், எம்.எல்.ஏ. நேரிடையாக சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளான சாலை வசதி, குடிநீர் வசதி,இலவச வீட்டு மனை பட்டா, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவுள்ளது" இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார். பின்னர் அவர், ஓசூர் எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சத்து 6,000 மதிப்பில் பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ. 6 லட்சத்து 50,000 மதிப்பில் கொல்லபேட்டையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.4 லட்சம் மதிப்பில் பஜனை மந்திர வீதி சாய்பாபா கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.3 லட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.20 லட்சத்து 56,000 மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத்தலைவர் நாராயணசாமி, பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி. ஜெயராமன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஓசூரில் உள்ள ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த நடைபெற்றது.
- நலிவுற்ற கட்சியினருக்கு பொற்கிழி மற்றும் ஏழைப்பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினர்.
ஓசூர்,
ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில், கட்சி தலைவரும், தமிழ்நாடு முதலமைச்ச ருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பட்டிமன்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஓசூரில் உள்ள ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், நாஞ்சில் சம்பத் ஆகியோர் நலிவுற்ற கட்சியினருக்கு பொற்கிழி மற்றும் ஏழைப்பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிகளுக்கு, மாநகர செயலாளரும், ஓசூர் மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். பட்டிமன்றத்தில், வேலூர் சாதிக், ஓசூர் வணங்காமுடி, சென்னை விஜயகுமார், நாகர்கோவில் மலர்விழி ஆகியோர் பேசினர். நடுவராக, நாஞ்சில் சம்பத் இருந்தார்.
மேலும் இதில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த நபர் எதிர்பாராத விதமாக முனியம்மாள் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததா ளாப்பள்ளி அருகே உள்ள பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 55 ). இவர் போலுப்பள்ளியில் உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் எதிர்பாராத விதமாக முனியம்மாள் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தளி போலீசார் ஜவகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவர்களிடமிருந்து பணம் ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் ஜவகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜப்பா (60) முத்துச்செட்டி (75) முத்துராஜ் (50 )முத்துராஜ் (55 ) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.
- தாறுமாறாக வந்த கார் சென்டர் மீடினில் மோதி நின்றது.
- போலீசார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இருந்து தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கிருஷ்ணகிரி வீட்டு வாரியம் சென்னை சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் சென்டர் மீடினில் மோதி நின்றது.
இதை அடுத்து போலீசார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அதகப்பாடி பகுதியைச் சேர்ந்த கௌதமபுத்திரன் (வயது 27 ) குடிபோதையில் இருந்து தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதம புத்திரனை கைது செய்தனர்.
- பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றையானையை விரட்டினர்.
- ஆக்ரோஷமாக ஓடிய காளை ஒன்று, வேட்டை தடுப்பு காவலர் சுனில் (25) என்பவரை முட்டி தள்ளியது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதி, சாவரப்பத்தம் பகுதியில், 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித் திரிந்தன. அதனை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கண்காணித்து, பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டு யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை, அருகே உள்ள கிராமத்திற்குள் புகுந்து. அங்கிருந்த பட்டிக்குள் புகுந்து மாடுகளை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் 3 மாடுகளுக்கு கால் முறிந்து பலத்த காயமடைந்தன.
இது குறித்த தகவலின் பேரில், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றையானையை விரட்டினர்.
அப்போது, பட்டிக்குள் இருந்த காளைகள், பட்டாசு சத்தம் கேட்டு மிரண்டு ஓட்டம் பிடித்தன. இதில், ஆக்ரோஷமாக ஓடிய காளை ஒன்று, வேட்டை தடுப்பு காவலர் சுனில் (25) என்பவரை முட்டி தள்ளியது.
இதில், அவருக்கு வலது மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட வனத்துறையினர், தளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். இது குறித்து அறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
- பட்டபடிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
- கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டபடிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கிருஷ்ணகிரி வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் முத்துராமன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அறிவழகன் சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவசக்தி, கந்தனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
- ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே துடி துடித்து கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள என்.தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது37). கூலி தொழிலாளியான இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிவசக்தி (23) என்பவருக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவசக்தி, கந்தனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே துடி துடித்து கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த கந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






