என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்கறி வியாபாரியை கட்ைடயால் அடித்து கொன்ற நண்பர்
    X

    காய்கறி வியாபாரியை கட்ைடயால் அடித்து கொன்ற நண்பர்

    • போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
    • சிலம்பரசனுக்கும், குமாரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டபள்ளி காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க நேற்று ஓசூர் ராம் நகர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி குமார் (வயது 29) என்பவர் வேலூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-

    பேரண்டப்பள்ளி காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஓசூர் பஸ் நிலைய பகுதியை சேர்ந்த திம்மராயப்பா மகன் சிலம்பரசன் (28) என்பது தெரியவந்தது.

    இவர் பத்தலபள்ளியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கொலையான சிலம்பரசனும், குமாரும் நண்பர்கள் ஆவர்.

    இந்த நிலையில் சிலம்பரசனுக்கும், குமாரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறி அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதனை அறிந்த குமார் கோபமடைந்து நண்பர் சிலம்பரசனை கண்டித்தார்.

    ஆனால் சிலம்பரசன் கள்ளதொடர்பை கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குமார், சிலம்பரசனை கட்டையால் பயங்கரமாக அடித்துக்கொலை செய்து விட்டு பேரண்டபள்ளி காட்டுப்பகுதியில் உடலை வீசி சென்றது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×