என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
    X

    ஓசூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

    • ஓசூரில் உள்ள ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த நடைபெற்றது.
    • நலிவுற்ற கட்சியினருக்கு பொற்கிழி மற்றும் ஏழைப்பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில், கட்சி தலைவரும், தமிழ்நாடு முதலமைச்ச ருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பட்டிமன்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஓசூரில் உள்ள ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், நாஞ்சில் சம்பத் ஆகியோர் நலிவுற்ற கட்சியினருக்கு பொற்கிழி மற்றும் ஏழைப்பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சிகளுக்கு, மாநகர செயலாளரும், ஓசூர் மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். பட்டிமன்றத்தில், வேலூர் சாதிக், ஓசூர் வணங்காமுடி, சென்னை விஜயகுமார், நாகர்கோவில் மலர்விழி ஆகியோர் பேசினர். நடுவராக, நாஞ்சில் சம்பத் இருந்தார்.

    மேலும் இதில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×