என் மலர்
கிருஷ்ணகிரி
- தங்கப் பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனர்.
- ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மத்தூர்,
சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட பல மாவட்டத்தைச் சார்ந்த 650-க்கும் மேற்பட்ட வில்வித்தை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 45 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 45 தங்கப்பதக்கங்களையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் ரிக்கர்வ் வில்வித்தை தனிநபர் பிரிவில் கலந்து கொண்ட கேசினி, போமேஷ்வர் ஆகிய இருவரும் தங்க பதக்கங்களைப் பெற்றனர்.
இந்தியன் வில்வித்தை தனிநபர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நவீன் குமார், கனிஷ்கா ஆகிய இருவரும், தனிநபர் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சந்ரு, சாதனா ஆகிய இருவரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாய்லேஷ்குமார், ஷாலினி ஆகிய இருவரும், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இஷானிகா, சம்ரக்ஷன் ஆகிய இருவரும், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வர்ஷினி பிரியா, தீவேஷ் ஆகிய இருவரும் என அனைவரும் தங்கப் பதக்கம் பெற்றனர்.
ஆடவர்களுக்கான பேர் வில்வித்தை குழுப் போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மெகதீஷ், சுந்திரநாதன், ராகவன், சங்கல்ப், இமையவன் ஆகியோரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நித்திஷ்குமார், யஷ்வந்த், லிங்கேஷ், கோகுல், பிரவின் குமார் ஆகியோரும் தங்கப் பதக்கம் பெற்றனர்.
மகளிருக்கான பேர் வில்வித்தை குழுப் போட்டியில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பு. ஹர்சிகா, சு.மு. தருணிகா இருவரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆ. ரித்திகா, கருண சாகரிகா, யாஷிகா வெங்கடேஷ், ஹரிணி, ஜனஸ்ரீ ஆகியோரும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சரித்திரா, நபிசா பாத்திமா, ஏ. பிரியா, வின்யா மற்றும் விணுஸ்ரீ ஆகியோரும் தங்கப் பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் முனைவர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் வாழ்த்துகளையும் சான்றிதழ்களையும் அளித்து மாணவர்களை ஊக்குவித்தனர்.
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
- முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வனத்துறை மூலமாக பெற்று ராம்குமாரின் குடும்பத்திற்கு வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போச்சம்பள்ளி ஒன்றியம் செல்லக்குட்டப்பட்டி ஊராட்சி புகம்பட்டியில் ராம்குமார் என்பவர் நேற்று யானை தாக்கி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ.நேற்று நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிதியுதவியில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வனத்துறை மூலமாக பெற்று ராம்குமாரின் குடும்பத்திற்கு வழங்கினார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- மது அருந்திய நிலையில் சாலனேரி ஏரியில் குளித்து கொண்டிருந்தார்.
- தண்ணீரில் மூழ்கி விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள உப்பாரப்பட்டி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது45). இவர் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று மது அருந்திய நிலையில் சாலனேரி ஏரியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் மூழ்கி விஜயன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிபோதையில் இருந்த இரண்டு பேரும் சேர்ந்து பிரசாந்தை பெல்டால் தாக்கியுள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் துளசி நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார்.
கடந்த 13-ம் தேதி ஓசூர் சிப்காட் மூக்கண்ட பள்ளியில் உள்ள இவரது நண்பர் பாபு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த எம்.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா (34) முரளி (28) இரண்டு பேரும் சேர்ந்து பிரசாந்தை பெல்டால் தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த பிரசாந்த் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- தாயாருக்கும் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு மகனுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
- குடும்பத்தகராறு ஏற்பட்டு மன வேதனை அடைந்த தேவி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளி எழில் நகர் பகுதி சேர்ந்த ஷகினா(வயது24). இவரது கணவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார் . இந்நிலையில் தனது இரண்டு வயது மகனுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஷகினாவுக்கும், அவரது தாயாருக்கும் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு மகனுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் குல்ஜார் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் ராயக்கோட்டை அருகே உள்ள அட்டகுறிக்கியை சேர்ந்த வெங்கடேசன். இவரது மகன் வேணுகோபால் (வயது28). இவர் சூளகிரி அருகே உள்ள நெல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் முனியம்மா கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கீழ்கோட்டை யாரப்பநகர் பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி கணேஷ் (வயது30) இருக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் கடந்த 11-ம் தேதி கொத்தனார் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் தேடியும் கணேஷ் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே உள்ள காடிப்பாளையம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி தேவி (வயது 24). இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மன வேதனை அடைந்த தேவி கடந்த 11-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இன்றைக்கு அதிகார துஷ்பிரயோகம் ஏற்பட்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் அ.தி.மு.க. துவங்கிவிட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி கூறியதாவது:-
ஆவின் பால் தட்டுப்பாடு செயற்கையான முறை என்பதுடன் தவறான கையாளுகின்றதால் மிகப்பெரிய அளவில் ஆவின் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30 லட்சம் ஆவின் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு எல்லா துறைகளிலும் உரிய முறையில் செயல்படாத காரணத்தினால் திறமையான அதிகாரிகள் பணிய மறுத்த காரணத்தினால் தனக்கு வேண்டியவர்களை பணியில் அமருவதால் ஒவ்வொரு துறையும் செயல் இழந்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்திருப்பது எவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதில் முறையாக செயல்படவில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சுமத்துகிறார். அதற்கு எடப்பாடி பொறுமையாக இருக்கிறார். யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இன்றைக்கு அதிகார துஷ்பிரயோகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் ஆணவ தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள்.
அப்படி நடக்கும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களுக்கு சில இடங்களில் காவல்துறையும் உறுதுணையாக இருக்கும். இதனால் மென்மேலும் தவறுகள் செய்ய வாய்ப்பு இருக்கும். அப்படி சட்டம் ஒழுங்கு பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆளும் கட்சியினர். முதலமைச்சருக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன். இதில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் அவரது ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்படும்.
பாராளுமன்ற தேர்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் அ.தி.மு.க. துவங்கிவிட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட அளவில் ஒன்றிய அளவில் சார்பு அணிகள் ஆலோசனை நடத்தி எப்படி தேர்தலில் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கி பம்பரம் போல் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சூர்யா என்ற சூரியகாந்த்(32) மற்றும் அவரது நண்பர்கள் முகமது கலிமை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
- நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்த முகமது கலிம் (வயது24). இவர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று திம்மச்சந்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு சரக்கு வாங்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறில் தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற சூரியகாந்த்(32) மற்றும் அவரது நண்பர்கள் முகமது கலிமை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த கலிம் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா, முரளி (வயது 33 ,)ஸ்டாலின் (32), காணிக்கைசாமி (38 )ஆகிய நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சகோதரர்களிடையே நில தகராறில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
- மன வேதனை அடைந்த கமலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள யு.புரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி கமலா (வயது26). இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிய நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவரது கணவர் மற்றும் அவரது சகோதரர்களிடையே நில தகராறில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மன வேதனை அடைந்த கமலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- உற்பத்தி செய்யும் முறைகளை பார்வையிட்டு, அரசு தோட்டக்கலைப் பண்ணையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
- ஆரஞ்ச், டிராக்கன் பழ செடிகள் உற்பத்தி மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜீனூர் அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை பண்ணையில் செடிகள் மற்றும் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த பணிகளை நேற்று கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர், தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் நடவு பொருட்கள், குழித்தட்டு நாற்றுகள், ஒட்டுச்செடிகள், ஒட்டு கட்டும்ட முறை மற்றும் இதர நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறைகளை பார்வையிட்டு, அரசு தோட்டக்கலைப் பண்ணையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மா, மாதுளை, சீதா, கொய்யா, நெல்லி, பப்பாளி, தென்னை, மருத்துவ மூலிகை செடிகள், முருங்கை மற்றும் தோட்டக்கலை பயிர்களான தக்காளி, மிளகாய், கத்திரி நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளையும், உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் மற்றும் விதைகள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தற்போது தட்டைபயிர், அத்தி, முள்சீத்தா செடிகள் புதியதாக உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும், மேலும் இப்பண்ணையில் முன்னோடி திட்டமாக ஆரஞ்ச், டிராக்கன் பழ செடிகள் உற்பத்தி மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமுதாய நீர்த்தேக்கத் தொட்டி யினையும், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு வழங்கப்படவுள்ள 100 ஏக்கர் நிலத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் பூபதி, துணை இயக்குநர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- ஓசூரில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
- சமூகத்திற்கு சிறப்பாக அளித்தமைக்காக “டைம்ஸ் ஹெல்த் எக்சலன்ஸ்” விருது வழங்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு, " டைம்ஸ் ஹெல்த் எக்சலன்ஸ் விருது " வழங்கப்பட்டுள்ளது. ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார திட்டம், சுகாதார முன் முயற்சி என சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை சமூகத்திற்கு சிறப்பாக அளித்தமைக்காக "டைம்ஸ் ஹெல்த் எக்சலன்ஸ்" விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை, சென்னை அயாட் ரீஜென்சி ஓட்டலில் கடந்த 11-ந்தேதி நடந்த விழாவில், மத்திய மந்திரி எல்.முருகன் வழங்க, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாளாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.
- வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறை வானார்.
- கோர்ட்டில் வருகிற 31-ந்தேதி விசாரணைக்காக ஆஜர் ஆகவேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. இவர் மீது வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறை வானார்.
இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனிடையே ஆஞ்சநேயா தேன்கனிகோட்டை கோர்ட்டில் வருகிற 31-ந்தேதி விசாரணைக்காக ஆஜர் ஆகவேண்டும் என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
- ஓசூர் டவுன் போலீசார் மலைக்கோயில் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அந்த சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது விசாரணையில் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் மலைக்கோயில் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜிஸ்னா மோல் பேபி (வயது 28) என்பவர் அந்த சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் ஜிஸ்னா மோல் பேபி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.






