search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அதியமான் பப்ளிக்  பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

    • தங்கப் பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனர்.
    • ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

    மத்தூர்,

    சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட பல மாவட்டத்தைச் சார்ந்த 650-க்கும் மேற்பட்ட வில்வித்தை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 45 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 45 தங்கப்பதக்கங்களையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

    இதில் ரிக்கர்வ் வில்வித்தை தனிநபர் பிரிவில் கலந்து கொண்ட கேசினி, போமேஷ்வர் ஆகிய இருவரும் தங்க பதக்கங்களைப் பெற்றனர்.

    இந்தியன் வில்வித்தை தனிநபர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நவீன் குமார், கனிஷ்கா ஆகிய இருவரும், தனிநபர் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சந்ரு, சாதனா ஆகிய இருவரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாய்லேஷ்குமார், ஷாலினி ஆகிய இருவரும், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இஷானிகா, சம்ரக்ஷன் ஆகிய இருவரும், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வர்ஷினி பிரியா, தீவேஷ் ஆகிய இருவரும் என அனைவரும் தங்கப் பதக்கம் பெற்றனர்.

    ஆடவர்களுக்கான பேர் வில்வித்தை குழுப் போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மெகதீஷ், சுந்திரநாதன், ராகவன், சங்கல்ப், இமையவன் ஆகியோரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நித்திஷ்குமார், யஷ்வந்த், லிங்கேஷ், கோகுல், பிரவின் குமார் ஆகியோரும் தங்கப் பதக்கம் பெற்றனர்.

    மகளிருக்கான பேர் வில்வித்தை குழுப் போட்டியில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பு. ஹர்சிகா, சு.மு. தருணிகா இருவரும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆ. ரித்திகா, கருண சாகரிகா, யாஷிகா வெங்கடேஷ், ஹரிணி, ஜனஸ்ரீ ஆகியோரும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சரித்திரா, நபிசா பாத்திமா, ஏ. பிரியா, வின்யா மற்றும் விணுஸ்ரீ ஆகியோரும் தங்கப் பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் முனைவர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் வாழ்த்துகளையும் சான்றிதழ்களையும் அளித்து மாணவர்களை ஊக்குவித்தனர்.

    Next Story
    ×