என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 26 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் பூமி பூஜை செய்து இப்பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், கூலியம் பஞ்சாயத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், அம்மனேரி கிராமத்தில் 6 லட்சத்து 68 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், மற்றொரு இடத்தில் 4 லட்சத்து 93 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், 3 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும், ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு இடங்களில், முள்கம்பி வேலி மற்றும் கிரீன் செட்டும், சவுளூரில் 9 லட்சத்து 60 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும் என மொத்தம், 26 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் பூமி பூஜை செய்து இப்பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கவுன்சிலர்கள் மகேந்திரன், காசி, பஞ்சாயத்து தலைவர் சுமதி ரமேஷ், துணைத் தலைவர் மாதப்பன், பாசறை கிருஷ்ணன், ஒம்பலக்கட்டு ராஜி, ஐடி பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், ஐடி பிரிவு ஒன்றிய தலைவர் பரமசிவம், செம்படமுத்துார் துணைத் தலைவர் மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நமது நாட்டின் பொருளாதாரம் தற்சார்பு நிறைந்ததாக வளர பாடுபட வேண்டும்.
    • தொழில் சார்ந்த கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூயில் கணினி மென்பொருள் உருவாக்கம் என்னும் தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.

    இதற்கு கல்லூரியின் தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்லூரியின் முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

    கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்தன் அனைவரையும் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

    திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி கணினி துறை பேராசிரியர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தாளாளர் பெருமாள் பேசுகையில் மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பம், சர்வதேச சந்தைப்படுத்தும் திறன் ஆகியவற்றை பயன்படுத்தி நமது நாட்டின் பொருளாதாரம் தற்சார்பு நிறைந்ததாக வளர பாடுபட வேண்டும். தொழில் சார்ந்த கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும் என வாழ்த்தினார்.

    பேராசிரியர் பிரபாகரன் பேசும் போது தகவல் தொழில் நுட்ப துறையே இந்தியாவில் பிற துறைகளை விட மிகவும் வேகமாக முன்னேற்றங்களை கண்டு வருகிறது.

    இந்தியாவில் உருவாக்கப் படும் மென்பொருட்களே சர்வதேச அளவில் கல்வி துறையிலும், தொழில் துறையிலு தகவல் தொழில் நுட்ப பரிமாற்றத்திலும் பயன்பட்டு வருகிறது. நமது மாணவர்களின் நுண்ணறிவு திறனை பலர் புதிய மென்பொருட்களை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைகிறது. எனவே தான் பன்னாட்டு அறிவியல் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இன்று இந்தியர்களே பதவி வகிக்கிறார்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தொடக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 450 மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கணினி பேராசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அங்கன்வாடி மைத்திற்கு வருகை தரும் குழந்தைகள் உரிய நேரத்திற்கு வருகை தருவதை உறுதி செய்யவேண்டும்.
    • கற்றல் திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம், சேலம் ஆவின் மேம்பாலம் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    ஆவின் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலங்களில் உட்பகுதி மற்றும் சுவர் பகுதிகளில் புதிய வர்ணம் அழகுப்படுத்திட வேண்டும். மேம்பாலம் கீழ் பகுதியில் பூங்காக்கள், மின்விளக்குகள் புதியதாக அமைக்கப்படும்.

    இப்பணிகள் அனைத்தும் மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கு போக்குவரத்து சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, மேல்கரடிகுறி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வருகை பதிவேடு, குடிநீர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, சத்துமாவு, குழந்தைகளின் எடை மற்றும் ஆகியவற்றை பார்வையிட்டு அங்கன்வாடி மைத்திற்கு வருகை தரும் குழந்தைகள் உரிய நேரத்திற்கு வருகை தருவதை உறுதி செய்யவேண்டும், மையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடு, கற்றல்திறனை ஆய்வு மேற்கொண்டு கற்றல் திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    பின்னர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு அனைத்து வீடுகளுக்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்கின்றதா என்பதை பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வேடியப்பன், தேசிய நெடுஞ் சாலைத்துறை (பராமரிப்பு மற்றும் கட்டுமானம்) திட்ட இயக்குனர் அதிபதி, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன், உதவிக் கோட்டப்பொறியாளர் ஜெயகுமார், கலெக்டர் அலுவலக மேலாளர்(நீதியியல்) வெங்கடேசன், தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அர்ச்சகர்கள் சார்பில் சயனோற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தை. தொடர்ந்து பள்ளியறை பூஜை நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள், கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

    தொடர்ந்து 14 நாட்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் சிகர நிகழ்ச்சிகளாக, கடந்த 7-ந் தேதி தேரோட்டம், 8-ந் தேதி பல்லக்கு உற்சவம் மற்றும் 9-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து, கடந்த 13-ந்தேதி வரை நாள்தோறும் இரவில், மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், சார்பிலும், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பிலும்,வருவாய் அலுவலர்கள்,ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் பல்லக்கு உற்சவம் மற்றும் சாமி வீதி உலா நடத்தப்பட்டது.

    விழாவின் நிறைவாக மலைக்கோவிலில், கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் சயனோற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது, திரளான பக்தர்கள் சாமி க்கு, மஞ்சள், குங்குமம், மாலை, உள்ளிட்ட மங்கல பூஜைப் பொருட்களையும், வேட்டி, சட்டை, அம்மனுக்கு சேலை, ரவிக்கை துணி, வளையல்கள் மற்றும் வாசனை திரவியங்கள், பலவிதமான பூக்கள் மற்றும் இனிப்பு பலகாரங்கள், பாயாசம் உள்ளிட்ட உணவு வகைகளை படைத்து வேண்டுதல் நடத்தினர்.

    சிறப்பு அலங்காரத்தை. தொடர்ந்து பள்ளியறை பூஜை நடைபெற்றது. சயன கோலத்தில் சாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் இதில், கோவில் செயல் அலுவர் சாமிதுரை மற்றும் சசிகுமார் உள்ளிட்ட பணியாளர்கள், தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொரகுறிக்கி கிராமத்தில் ரூ.3,10,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒன்றிய பொது நிதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
    • பணிகளை சூளகிரி ஒன்றிய குழு சேர்மன் லாவண்யா ஹேமநாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் அந்த பகுதி மக்கள் அடிப்படை வசதி கேட்டு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அந்தந்த பகுதியில் சேர்மன், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அத்திமுகம் கிராமத்தில் ரூ.3,50,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, நரசிபுரம் கிராமத்தில் ரூ.9,75,000மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, திம்மசந்திரம் கிராமத்தில் ரூ.4,00,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கொரகுறிக்கி கிராமத்தில் ரூ.3,10,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒன்றிய பொது நிதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.

    இதனால் மொத்தம் சுமார் ரூ.20 லட்சத்து 35,000 மதிப்பீட்டில் அரசு திட்ட வளர்ச்சி பணிகளை சூளகிரி ஒன்றிய குழு சேர்மன் லாவண்யா ஹேமநாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பா சீனிவாசன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் சிக்கப்பையா, வெங்கடேஷ், பாபு, ஜெகதீசன், பாஸ்கர், ஆனந்த், ஊராட்சி துணை தலைவர் கிருஷ்ணப்பா, முனிராஜ், சீனப்பா, வெங்கட்டசாமி, ஊர் கவுண்டர்கள் ராமமூர்த்தி, முருகேஷ், அப்பையா, மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், பொதுமக்கள், புரோக்கர்கள் வந்து செல்கின்றனர்.
    • வாகனங்களை அரசு விதிமீறி அங்கும் இங்குமாக நிறுத்தி செல்வதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பகுதியில் சிப்காட் அமைக்க இடம் தேர்வு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தொழில் முனை வோர்கள் பல ஆண்டுகளாக குவிந்து வருகின்றனர்.

    மேலும் சூளகிரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் பத்திரபதிவு அலுவலகங்கள் அதிக அளவில் உள்ளதால் நிலம் வாங்க, விற்க என ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், பொதுமக்கள், புரோக்கர்கள் வந்து செல்கின்றனர்.

    மேலும் வாகனங்களை அரசு விதிமீறி அங்கும் இங்குமாக நிறுத்தி செல்வதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    • கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீ டு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள பெரியகுதி பகுதியை சேர்ந்த 17வயது இளம்பெண். கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீ டு திரும்பவில்லை.

    அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் இதே பகுதியை சேர்ந்த பிரசன்னகுமார் (வயது23) என்பவர் கடத்தி சென்றதாக ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண்னின் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே போல் ஒசூர் அருகே உள் நல்லூர் பகுதியை சேர்ந்த தசரதன்(வயது51), இவரது மனைவி ரேவதி (37), இவர் கடந்த 14-ம் தேதி தனது குழந்தையை பள்ளி வேனில் அனுப்பி விட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.

    இதனால் அச்சமடைந்த தசரதன் அட்கோ போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்த வழியாக எதிரே வந்த கார் முதியவர் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இளம்பிள்ளை இறந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், பில்லனகுப்பம் அருகே உள்ள போலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இளம்பிள்ளை (வயது76).

    இவர் கடந்த 12-ந் தேதி ஒசூர் கிருணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் முதியவர் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த இளம்பிள்ளை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இளம்பிள்ளை இறந்தார்.

    இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் இருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் வந்து கட்டையாலும் தாக்கி மிரட்டிசென்றுள்ளனர்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள முடிக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த முனியப்பன் மனைவி ராதா (வயது35). இவர் நேற்று வீட்டில் இருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் வந்து கையாலும்,கட்டையாலும் தாக்கி மிரட்டிசென்றுள்ளனர்.

    இதனால் காயமடைந்த ராதா பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து அங்கிருந்து கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாழ்கையில் விரக்கியடைந்த அனிதா கடந்த 4-ம் தேதி விஷம் குடித்துள்ளார்.
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டு அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று இறந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள வெள்ளையாம்பதி பகுதியை சேர்ந்த செந்தில். இவரது மனைவி அனிதா (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்காளக வயிற்றுவலியால் அனிதா அவதிபட்டுவந்துள்ளார். இதனால் வாழ்கையில் விரக்கியடைந்த அனிதா கடந்த 4-ம் தேதி விஷம் குடித்துள்ளார்.

    இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைகாக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டு அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று இறந்தார்.

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனக்கோடி கடந்த 12-ந்தேதி வீட்டில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று தனக்கோடி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள கூரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனக்கோடி (வயது65).

    இந்த நிலையில் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனக்கோடி கடந்த 12-ந்தேதி வீட்டில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனக்கோடி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், உபகரணங்களையும் ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்
    • விளையாட்டுகளிலும் முதன்மையான மாணவர்களாக திகழ்ந்து மேன்மேலும் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    மகளிரின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக்குழுக்களை அமைத்து செயல்பட்டு வரும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் மூலம் ஏராளமான கல்வி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெலகோலா பகுதியில் உள்ள மான்போர்ட் செவித்திறன் குறைந்த மற்றும் பேசும் திறனற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் சிறப்பு பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

    அவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டும், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஐ.வி.டி.பி. நிறுவனம் அந்த பள்ளியில் படிக்க கூடிய 120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், போர்வைகள், காலணிகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள் என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், உபகரணங்களையும் ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும் போது இந்த கல்வி உபகரணங்களையும், அத்தியாவாசிய பொருட்களையும் மாண வர்களின் நலனுக்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் ஐ.வி.டி.பி. நிறுவனம் வழங்கி உள்ளதாகவும், இதை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியிலும், விளையாட்டுகளிலும் முதன்மையான மாணவர்களாக திகழ்ந்து மேன்மேலும வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    ×