என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி ஒன்றியத்தில் சாலைகள் அமைக்கும் பணி
- கொரகுறிக்கி கிராமத்தில் ரூ.3,10,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒன்றிய பொது நிதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
- பணிகளை சூளகிரி ஒன்றிய குழு சேர்மன் லாவண்யா ஹேமநாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் அந்த பகுதி மக்கள் அடிப்படை வசதி கேட்டு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அந்தந்த பகுதியில் சேர்மன், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் அத்திமுகம் கிராமத்தில் ரூ.3,50,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, நரசிபுரம் கிராமத்தில் ரூ.9,75,000மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, திம்மசந்திரம் கிராமத்தில் ரூ.4,00,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கொரகுறிக்கி கிராமத்தில் ரூ.3,10,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒன்றிய பொது நிதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
இதனால் மொத்தம் சுமார் ரூ.20 லட்சத்து 35,000 மதிப்பீட்டில் அரசு திட்ட வளர்ச்சி பணிகளை சூளகிரி ஒன்றிய குழு சேர்மன் லாவண்யா ஹேமநாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பா சீனிவாசன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் சிக்கப்பையா, வெங்கடேஷ், பாபு, ஜெகதீசன், பாஸ்கர், ஆனந்த், ஊராட்சி துணை தலைவர் கிருஷ்ணப்பா, முனிராஜ், சீனப்பா, வெங்கட்டசாமி, ஊர் கவுண்டர்கள் ராமமூர்த்தி, முருகேஷ், அப்பையா, மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.






