மான்போர்ட் சிறப்பு பள்ளிக்கு ரூ.11 லட்சம் கல்வி உபகரணங்கள்

ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், உபகரணங்களையும் ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்விளையாட்டுகளிலும் முதன்மையான மாணவர்களாக திகழ்ந்து மேன்மேலும் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும்
மான்போர்ட் சிறப்பு பள்ளிக்கு  ரூ.11 லட்சம் கல்வி உபகரணங்கள்
Published on

கிருஷ்ணகிரி,

மகளிரின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக்குழுக்களை அமைத்து செயல்பட்டு வரும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் மூலம் ஏராளமான கல்வி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெலகோலா பகுதியில் உள்ள மான்போர்ட் செவித்திறன் குறைந்த மற்றும் பேசும் திறனற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் சிறப்பு பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

அவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டும், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஐ.வி.டி.பி. நிறுவனம் அந்த பள்ளியில் படிக்க கூடிய 120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், போர்வைகள், காலணிகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள் என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், உபகரணங்களையும் ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும் போது இந்த கல்வி உபகரணங்களையும், அத்தியாவாசிய பொருட்களையும் மாண வர்களின் நலனுக்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் ஐ.வி.டி.பி. நிறுவனம் வழங்கி உள்ளதாகவும், இதை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியிலும், விளையாட்டுகளிலும் முதன்மையான மாணவர்களாக திகழ்ந்து மேன்மேலும வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com