என் மலர்
கிருஷ்ணகிரி
- காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.
- மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது.
அதிக வெயில் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்லவே அச்சப்பட்டனர். இரவில் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் அவதியடைந்தனர். இந்த நிலையில் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.
இதையடுத்து மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. ஓசூரில் மிதமான மழையும், சூளகிரி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.
மேலும் புக்கசாகரம், அனுமந்தபுரம் ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு பரவலாக இரவு வரை மழை பெய்தவாறு இருந்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் நிம்மதியாக தூங்கினர்.
- வீட்டில் உள்ளவர்கள் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருபெண்னை திருமணம் செய்து வைத்ததால் மனவேதனையில் இருந்துள்ளார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவசங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சிவசங்கர் (வயது24). இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ள நிலையில் இவர் வேறு ஒருபெண்னை காதலித்துள்ளார்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருபெண்னை திருமணம் செய்து வைத்ததால் மனவேதனையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவசங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மாமா ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து காரிமங்கலம்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கலேகொண்ட பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒசூர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வானியம்பாடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம்,தொகரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி. இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் மத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ஜிட்டோபனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் சூரியா என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள எல்லன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் காரிமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- லாரி எதர்பாரதவிதமாக மோதியதில் படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஓம்சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மெய்யப்பா. இவரது மகன் சந்திரன் (வயது 32).இவர் ஒசூர் ரோடு மத்தம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதர்பாரதவிதமாக மோதியதில் படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- நூறு நாள் வேலை திட்டத்திற்கு சுழற்சி முறையைக் கைவிட்டு கூடுதலாக நிதி ஒதுக்கி எந்தவித குளறுபடியும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
- விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்வராசு, மாநிலக்குழு உறுப்பினர் லெனின், மாவட்ட துணைத் தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வரதராஜி, வெங்கடாசலம், கல்பனா முருகன், ராஜா, மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி விளக்கவுரை ஆற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் விவசாயம், விவசாயம் சார்ந்த வேலைகளில் ஒரே மாதிரியான சட்டக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்தி, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்திற்கு சுழற்சி முறையைக் கைவிட்டு கூடுதலாக நிதி ஒதுக்கி எந்தவித குளறுபடியும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள் ஆகவும், சட்டக்கூலியாக, 600 ரூபாய் வழங்க வேண்டும். 60 வயது முடிவடைந்த அனைத்து விவசாய, விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும். வீட்டுமனையற்ற மக்களுக்கு வீட்டுமனை இடமும், வீடு கட்ட 10 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அரசு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
- 16 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.
- முரண்பாடுகள் கண்டறிப்பட்டால், உரிய அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கிருஷ்ணகிரி,
குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எடையளவுகள் மற்றும் மின்னனு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டலப் பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்க விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருடுகள் விதிகளின் கீழ் தண்டனைக்குரியதாகும்.
ஆய்வின் போது முரண்பாடுகள் கண்டறிப்பட்டால், உரிய அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சட ஊதியச் சட்டத்தின்கீழ் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தினை வழங்காதது, ஆய்வின் சமயம் கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 16 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.
அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறுமாதங்கள் முதல் இரண்டாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க நேரிடும். மேலும், குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- தற்போது தேன்கனிக்கோட்டை, நொகனூர் வனப்பகுதியில் 13 யானைகள் உள்ளன.
- கோடையில் வனவிலங்குகள் வெளியே வராமல் இருக்க தண்ணீர் தொட்டியில் அமைக்கப்பட்டு வருகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டம் 1,501 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இங்கு காவேரி வடக்கு மற்றும் தெற்கு சரணாலயங்கள் உள்ளன. இதில் யானைகள், காட்டு எருமைகள், மான்கள், கரடிகள், சிறுத்தைகள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
கோடைக்காலங்களில் ஆண்டுதோறும் தண்ணீர் தேடி கர்நாடகாவின் பன்னர் கட்டாவிலிருந்து 200 க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம்.
கர்நாடக வனப்பகுதியி லிருந்து கடந்தாண்டு 100-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அந்த யானைகள் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பிச் செல்லாமல் சானமாவு, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் குழுவாக பிரிந்து சென்று அருகே உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன. அந்த யானைகளை ஒன்று சேர்த்து கடந்த மாதம் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு வனத்துறையினர் இடம் பெயரச் செய்தனர்.
இந்நிலையில் தற்போது கோடைக்கு முன்னரே கடும் வெயில் உள்ளதால், வனத்தில் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்துள்ளன. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு தண்ணீர் தேடி கிராமங்களுக்கு படையெடுக்கும் என்பதால், வனத்துறையினர் வனப்பகுதியில் கசிவு நீர் குட்டை, ஆழ்துளை கிணறுகள், தீவனப்புல் தோட்டம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தேன்கனிக்கோட்டை வனசரகத்தில் தொழுவ பெட்டா, அய்யூர், கெம்பகரை, கொடகரை பகுதிகளில் நிரந்தமாக 60 யானைகள் உள்ளன.
கடந்த வாரம் கர்நாடகாவி லிருந்து 70 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. அதனை மீண்டும் ஜவளகிரி வழியாக பன்னர்கட்டா வனப்பகுதிக்கு இடம்பெயர செய்து விட்டோம். தற்போது தேன்கனிக்கோட்டை, நொகனூர் வனப்பகுதியில் 13 யானைகள் உள்ளன.
வனப்பகுதியில் ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது. இதனால் கோடையில் வனவிலங்குகள் வெளியே வராமல் இருக்க தண்ணீர் தொட்டி அமைத்தல், ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல், கசிவு நீர் குட்டை கட்டுதல், தடுப்பணை கட்டுதல், பழுதடைந்த கசிவு நீர் குட்டையை புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அது மட்டும் அல்லாமல் காப்புகாட்டிற்குள் தீவன தோட்டமும் அமைத்து வருகிறோம். இதன் மூலம் வனவிலங்குகள் வெளியே வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என கூறினார்.
- நலத்திட்ட வழங்கும் விழா ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் நடந்தது.
- முடிவில் ஒன்றிய பொருளாளர் எஸ்.பி.முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட வழங்கும் விழா ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக் ஒன்றிய செயலாளர் எம்.சின்னராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி, மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும்மான ஒய்.பிரகாஷ், மாவட்ட துணைச்செயலாளர் பி.முருகன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 1200 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் ஓசூர் மாநகர மேயர் எஸ்.எ.சத்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணைசெயலாளர் சின்னசாமி, கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
முன்னதாக நகர செயலாளர் நாகராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் ஒன்றிய பொருளாளர் எஸ்.பி.முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- லட்சுமிநாராயணனை ரவி கையாலும், கல்லாலும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
- ஓசூர் சிப்காட் போலீசார் ரவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது44). இவரது சகோதரி மாரம்மாவிடம் ரூ.2 லட்சம் கடனாக அதே பகுதியை சேர்ந்த ரவி (48) என்பவர் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பணத்தை லட்சுமிநாராயணன் கேட்டபோது அவர்களுக்குள் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் லட்சுமிநாராயணனை ரவி கையாலும், கல்லாலும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்ந்து அங்கிருந்து லட்சுமி நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் ரவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டி ஷக்கில்புல்இஸ்லாமிடம் பணம் கேட்டு மிரட்டி யுள்ளனர்.
- சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், விக்னேஷ்யை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் எலசகிரி பகுதியை சேர்ந்தவர் ஷக்கில்புல்இஸ்லாம் (வயது23) இவர்
நேற்று சிப்காட் பேடரப் பள்ளி ஆஞ்சநேயர்கோவில் அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பேடரப் பள்ளி பாரதியார்நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (25), விக்னேஷ் (20) ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ஷக்கில்புல்இஸ்லாமிடம் பணம் கேட்டு மிரட்டி யுள்ளனர்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், விக்னேஷ்யை கைது செய்தனர்.
- மத்திகிரி போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
- பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நின்றுகொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
அப்போது எஸ்.முத்துகானப்பள்ளியில் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு பொதுமக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் வகையில் நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(26), யாரப்பாஷா (27) ஆகிய 2பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல் சூளகிரி போலீசார் சர்ச் சாலை, டேம்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நின்றுகொண்டிருந்த போகிபுரம் பகுதியை சேர்ந்த முரளி(30) என்பவரை கைது செய்தனர்.
- வருகிற 23-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
- கபடி, ஜூடோ மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் வருகிற 23-ந் தேதி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், மகளிருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 23-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
அதன்படி, தடகள விளையாட்டில் 100, 200, 400 மீட்டர், ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும், இறகுபந்து விளையாட்டில் இரட்டையர் பிரிவு போட்டிகளும், கபடி, ஜூடோ மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கப்படுகிறது.
போட்டிகளில் அனைத்து வயது பிரிவு மகளிரும் கலந்துகொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகளிர், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பயனடையலாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






