என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒசூரில் பணத்தகராறில் பெண்னை தாக்கியவர் கைது
    X

    ஒசூரில் பணத்தகராறில் பெண்னை தாக்கியவர் கைது

    • லட்சுமிநாராயணனை ரவி கையாலும், கல்லாலும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
    • ஓசூர் சிப்காட் போலீசார் ரவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது44). இவரது சகோதரி மாரம்மாவிடம் ரூ.2 லட்சம் கடனாக அதே பகுதியை சேர்ந்த ரவி (48) என்பவர் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த பணத்தை லட்சுமிநாராயணன் கேட்டபோது அவர்களுக்குள் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் லட்சுமிநாராயணனை ரவி கையாலும், கல்லாலும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

    பின்னர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்ந்து அங்கிருந்து லட்சுமி நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் ரவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×