search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடி, மின்னலுடன் திடீர் ஆலங்கட்டி மழை
    X

    இடி, மின்னலுடன் திடீர் ஆலங்கட்டி மழை

    • காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.
    • மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது.

    அதிக வெயில் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்லவே அச்சப்பட்டனர். இரவில் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் அவதியடைந்தனர். இந்த நிலையில் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.

    இதையடுத்து மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. ஓசூரில் மிதமான மழையும், சூளகிரி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.

    மேலும் புக்கசாகரம், அனுமந்தபுரம் ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு பரவலாக இரவு வரை மழை பெய்தவாறு இருந்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் நிம்மதியாக தூங்கினர்.

    Next Story
    ×