என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருப்பது தெரிந்தது.
    • மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி பாலாஜி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது வீட்டின் பூட்டை கடந்த 15-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து வீட்டினுள் இருந்த 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்ஐ பிரபாகரன், எஸ்எஸ்ஐ ராஜா, ஏட்டு சாரதி, போலீஸ் ஏழுமலை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில், இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி அடுத்த தண்டேகுப்பத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான சதீஷ்குமார் (25) என்பது தெரிந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருப்பது தெரிந்தது.

    உடனடியாக தனிப்படை போலீசார் கோவாவிற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த சதீஷ்குமாரை, கைது செய்து விசாரணைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர், ஏற்கனவே கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூரில் சிவக்குமார் என்பவரின் வீட்டில் 17.5 பவுன் தங்க நகைகளும், பழையபேட்டை செல்வராஜ் நகரில் உள்ள அம்மு என்பவரது வீட்டில் 5 பவுன் தங்க நகைகளும், காவேரிப்பட்டணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டில் 7 பவுன் தங்க நகைகளும் என 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.

    மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், தனது நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி(எ)விக்ரம், அப்பு(எ)விமல் ஆகியோரிடம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும், சதீஷ்குமார் மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி நகரம், தாலுகா, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், மகாராஜகடை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொள்ளை சம்பவங்கள் தனித்தே ஈடுபடுவது வழக்கம் கொண்ட சதீஷ், அந்த நகைகளை விற்க வைப்பூரில் உள்ள தனது நண்பர்களுக்கு செலவு செய்வது, சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டவர் என தனிப்படை போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • கடந்த 13-ம் தேதி தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக வீட்டில் கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது31), இவர் அதே பகுதியில் மேன்பவர் ஏஜென்சீஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக வீட்டில் கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சிடைந்த அவரது மனைவி விவேதா(23) கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல் தேன்கனிகோட்டை அருகே உள்ள பெரிய சாதனக்கல் பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் சிவா(32) கடந்த 6-ம் தேதி கட்டிட வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி மாதம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விஜயராஜ் என்பவருக்கு திருமணமாகவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • மனமுடைந்த விஜயராஜ் நேற்று முன்தினம் கம்பெணி குடோன் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கர்நாடகா மாநிலம் மதன்போர்கவுஸ் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (வயது 34) என்பவர் கடந்த 4 மாதங்களாக வேலைப பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணமாகவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த விஜயராஜ் நேற்று முன்தினம் கம்பெணி குடோன் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது உறவினர் சுந்தரன் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • மனவிரக்கியடைந்த முனிகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம்,அஞ்செட்டி அருகே உள்ள கோரிபா ளையம் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன்(வயது37). இவர் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிபட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை,

    இதனால் மனவிரக்கியடைந்த முனிகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அரவது மனைவி ரூபா கொடுத்த புகாரின் பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடிபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி கொண்டிருந்தனர்.
    • 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் கரடிகுறி மற்றும் கே.பூசாரிப்பட்டியில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு குடிபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி கொண்டிருந்த மல்லி நாயணப்பள்ளி அருகே உள்ள கள்ளியூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்கிற திருப்பதி (27), கோனேகவுண்டனூர் ஜெய்நகர் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் (33) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஒட்டலுக்கு பெயர் வைப்பத்தில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பிலும் பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொண்டனர்.
    • 8 பேரை கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 23) தரப்புக்கும், தாடிக்காரன்கொட்டாய் லஷ்மணன் (35) தரப்புக்கும் ஒட்டலுக்கு பெயர் வைப்பத்தில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பிலும் பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொண்டனர்.

    அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இரு தரப்பினரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்தனர். பின்னர் அவர்கள் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் பெத்தததாளப்பள்ளியை சேர்ந்த சாந்தகுமார்(30), சக்திவேல் (23), முனியம்மாள்(45), பெருமாள்(39) தாடிக்காரன்கொட்டாய் விஜி(42), ராமன் (38), துரிஞ்சிபட்டி சக்திவேல் (24), கட்டிகானப்பள்ளி கோமதி(39) உள்ளிட்ட 8 பேரை கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் கைது செய்தனர்.

    • விழாவில் குந்தாரப்பள்ளி சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்.
    • விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா விமர்சியாக நடைபெற்றது.

    இப்பள்ளி ஆரம்பித்து 76 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து கொரோனா பாதிப்பிற்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் பள்ளியாக இப்பள்ளியில் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு விழாவில் தமிழக எல்லைப் பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மாநில மொழிகளிலும் குழந்தைகள் நடனமாடி பொதுமக்களை கவர்ந்தனர். இந்த ஆண்டு விழாவில் குந்தாரப்பள்ளி சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்.

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பர்களாக இப்பள்ளியில் பயின்ற வழக்கறினர் பாண்டியன், சரஸ்வதி பள்ளி தாளாளர் அன்பரசு, சிவகாமியம்மாள் கல்லூரி தா ளாளர் குமரன், அகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆண்டு விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள், குந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமா னோர் கலந்து கொ ண்டனர். 

    • பாரத் பள்ளியின் நிறுவனர் சிறிய கால்வாய் மற்றும் பாலம் அமைக்க ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார்.
    • கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை வழங்கி வருகிறார் என தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் உள்ள பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், இம்மிடி நாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி யில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான டி.மணி, இம்மிடிநாயக்கனப்பள்ளி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

    இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜோசப்ராஜ் வரவேற்றார். விழாவிற்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி தலைமை தாங்கினார்.

    விழாவில் தலைமை ஆசிரியர் பேசுகையில், இப்பள்ளி வனப்பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது-. இங்கு ஏழை மாணவ, மாணவிகள் அதிக அளவில் படித்து வருகிறார்கள். இந்த பகுதியில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும் போது கால்வாய் நீரை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர்.

    இதை அறிந்த பாரத் பள்ளியின் நிறுவனர் சிறிய கால்வாய் மற்றும் பாலம் அமைக்க ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை வழங்கி வருகிறார் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் வழங்கினார்.
    • வரவாற்று சிறப்புகளை அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசுத்துறையின் உயர் பதவிகளுக்கு உயர வேண்டும்.

    ஓசூர்.  

    ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், "மாபெரும் தமிழ்க் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்சிக்கு, ஓசூர் சப் - கலெக்டர் சரண்யா தலைமை தாங்கினார். இதில், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, "சமூகமும், கல்லூரிக்கு வெளியே கல்வி" என்ற தலைப்பிலும், ஊடகவியலாளர் சமஸ், "தமிழ் வரலாறு என்ன சொல்கிறது? என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.

    விழாவில், சப்- கலெக்டர் சரண்யா பேசியதாவது:-

    இந்த நிகழ்ச்சியில் தமிழ் மரபும்-நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும், வளர்ச்சியும், சுற்றுலா வாய்ப்புகள், அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நடைபெறுகிறது.

    மாணவ,மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் சொற்பொறிவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தும், மாபெரும் தமிழ்க் கனவு காணொளியை கண்டும், வரவாற்று சிறப்புகளை அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசுத்துறையின் உயர் பதவிகளுக்கு உயர வேண்டும்.

    இவ்வாறு சப்- கலெக்டர் சரண்யா பேசினார்.

    தொடர்ந்து, நிகழ்ச்சியில் தமிழ்ப் பெருமிதம் குறித்தும், கேள்வி, பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் வழங்கினார்.

    இதில், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, தனி தாசில்தார்கள் பெருமாள், ரமேஷ், கல்லூரி முதல்வர் டாக்டர் ஹெலன், உதவி பேராசிரியர் (தமிழ்த்துறை) எழிலரசி மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் மற்றும் தளிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 8 கல்லூரிகளை சேர்ந்த 1,000 மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர்.

    • தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
    • இன்று சந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியானது கர்நாடகா, ஆந்திராவை ஒட்டியுள்ள தமிழக பகுதியாக அமைந்து உள்ளதால் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

    மேலும் வரும் மார்ச் 22-ம்தேதி தெலுங்கு வருடபிறப்பு தொடங்க உள்ளதால் இன்று சந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 

    • 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது.
    • 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் ஊராட்சி லைன் கெல்லை கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது.

    அதே போல், கவேரிப்பட்டணம் குண்டலப்பட்டி ஊராட்சி கே.மோட்டூர் கிராமத்தில், கே.ஆர்.பி., அணை வலதுபுற கால்வாய் மீது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி வேட்டியம்பட்டி கிராமத்தில், மாநில நிதிக்குழு மானியத்தில், 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கல்வெட்டும், 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்படுகிறது.

    கூலியம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், அம்மனேரி கிராமத்தில் 6 லட்சத்து 68 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், மற்றொரு இடத்தில் 4 லட்சத்து 93 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், 3 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும், ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு இடங்களில், முள்கம்பி வேலி மற்றும் கிரீன் செட்டும், சவுளூரில் 9 லட்சத்து 60 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ.82 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய செயலா ளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், பையூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஐ.டி.பிரிவு செயலாளர் வேலன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சியின் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு விவசாய நிலத்தில் தென்னை மரத்தில் திடீரென இடி தாக்கியது.
    • மரத்தின் உச்சியில் தீ பிடித்து சருகுகள் எரிந்து நெருப்பு பொறிகள் கீழே தரையில் விழுந்தன.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் நேற்று திடீர் மழை பெய்தது. இந்த நிலையில் மாலையில் சூளகிரி அருகே நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தென்னை மரத்தில் திடீரென இடி தாக்கியது.

    இதில் மரத்தின் உச்சியில் தீ பிடித்து சருகுகள் எரிந்து நெருப்பு பொறிகள் கீழே தரையில் விழுந்தன. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிச்சியடைந்தனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×