என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தது.
    • மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், பணம் ரூ 2950 பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை போலீசார் மஸ்தி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தது.

    அடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை ராஜீவ் நகரையை சேர்ந்த முருகன் (வயது 43) என தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், பணம் ரூ 2950 பறிமுதல் செய்தனர்.

    • டாஸ்மாக் கடையில் புகுந்து மாதேஷ் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
    • கல்லா பெட்டியில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கம், 3, மதுபெட்டிகள் மற்றும் செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்து சென்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தபால் மேடு என்னும் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் கல்லாவியை எடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (48) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். சூப்பர்வைசராக கிருஷ்ணன் என்பவர் இருந்து வந்தார்.

    இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மதுவிற்பனை படுஜோராக நடந்தது.

    இதையடுத்து இரவு திடீரென மர்ம நபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கினர். அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர். பின்னர் டாஸ்மாக் கடையில் புகுந்து மாதேஷ் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    பின்னர் கல்லா பெட்டியில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கம், 3, மதுபெட்டிகள் மற்றும் செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதுகாப்பு குறித்த திறன் சுய உதவ குழு பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த திறன் சுய உதவ குழு பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், ஷகிலா, மற்றும் சுயு உதவி குழு உறுப்பினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
    • ரங்கநாயக் உறவினர்கள் மீது அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாயக் (வயது 55). கொசு வலை வியாபாரி. இவர் கடந்த 12-ந் தேதி உயிரிழந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சாமி கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக உரிகம் கிராம நிர்வாக அலுவலர் கிரிஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரங்கநாயக் உறவினர்கள் மீது அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் கோவில் திருவிழாவில் ஒரு சமுதாயத்தினர் வைத்த பேனரில் தங்களுக்கு வேண்டியவரின் பெயரை அச்சடிக்கவில்லை என கூறி உயிரிழந்த ரங்கநாயக் உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவிழாவில் நடக்கும் நாடகத்திற்கு செல்ல கூடாது என முடிவு செய்திருந்தனர்.

    ஆனால் அதையும் மீறி ரங்கநாத் நாடகத்தை பார்க்க சென்றதால் அவரை பிடித்து இழுத்து வந்த அவரது உறவினர்கள் தப்பி செல்ல முயன்றதால் அவரை தாக்கியதாவும் அதில் ரங்கநாயக் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் அரியகுளத்தில் மாற்று கட்சினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.
    • தருமபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மாது முன்னிலை வகித்தார்.

    கிருஷ்ணாபுரம், மார்ச்.19-

    தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழிகாட்டுதல் படி தருமபுரி வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் அரியகுளத்தில் மாற்று கட்சினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமை வகித்தார்.தருமபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மாது முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் அரியகுளம் ஒன்றிய குழு உறுப்பினர் சிவா ஏற்பாடு செய்திருந்தார். மேலும் ஆண்டி அள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி மற்றும் ராமஜெயம், சிவசக்த்தி, தேகேஷ், சாமிகண்ணு, சாமிதுரை, சிங்காரவேலு, பார்த்திபன், கரன், சரன் உள்பட பலர் தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமையில் தங்களை தி.மு.க வில் இணைந்து கொண்டனர்.

    இவ்விழாவில் இவ்விழாவில் வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட கழக துணை செயலாளர் வழக்கறிஞர் மணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் மருத்துவர் பிரபு ராஜசேகர், அரூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தென்னரசு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன், சோலை. முனியப்பன், செல்லதுரை, பாலாஜி, வழக்கறிஞர் வீரமணி மற்றும் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் திரளாக கலந்துக்கொண்டனர்.

    • பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குறைசொல்லி வளர்க்க கூடாது.
    • ஓவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள்தான் அவனை சரியான பாதையில் செல்ல வழிகாட்டியாக அமையும்.

    கிருஷ்ணகி,

    கிருஷ்ணகிரி அருகே பெங்களுரு தேசிய நெடுஞ்சா லையில் குந்தாரப்பள்ளி கூட்டு ரோட்டில் இயங்கி வரும் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரிப்பள்ளியில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி பயின்று வரும் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

    இப்பட்டமளிப்பு விழாவில் பள்ளியின் நிறுவனர் அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றும் போது குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் ரோல்மாடல் என்றும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குறைசொல்லி வளர்க்க கூடாது.அவர்களை ஊக்கப்படுத்தும் விதமா கவும், பெற்றோர்களின் வார்த்தைகள் நம்பிக்கைகு உரியதாக இருக்க வேண்டும்.

    ஓவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள்தான் அவனை சரியான பாதையில் செல்ல வழிகாட்டியாக அமையும்.

    பள்ளியிலும் ஆசிரியர், ஆசிரியைகள் ஓவ்வொரு குழந்தைகளின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி பெற்றோர்களிடமும் அவர்களின் குழந்தைகளின் திறமைகளை வளர்க்க பேருதவியாக இருக்க வேண்டும்.

    பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்து விட்டு கடமை முடிந்து விட்டது என்று எண்ணி விடக்கூடாது.

    பள்ளியின் பங்களிப்பு 75 சதவீதம் என்றால் 25 சதவீதம் பெற்றோர்களின் பங்களிப்பு மிக அவசியம். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சிறப்பான முறையில் கண்காணித்து வளர்க்க வேண்டியது முக்கிய கடமையாகும்.

    பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ஓன்றாக ேசர்ந்து பயணித்தால் மட்டுமே ஓரு நல்ல மாணவனை இச்சமு தாயத்திற்கு முன்னேற்ற முடியும் என்றார்.

    இவ்விழாவினை பள்ளியின் தாளாளர் சங்கீதா அன்பரசன் தலைமையேற்று நடத்தி வைத்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மேலாளார் பூபேஷ் வரவேற்றார். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் சர்மிளா நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பாம்பு படம் எடுத்து அந்த நாயை தீண்ட முற்பட்டது.
    • பரபரப்பான இந்த சண்டையில் கடும் கோபத்தில் இருந்த நாய், பாம்பை கடித்து குதறியது.

    ஓசூர்,

    கிருஷ்ண கிரி மாவட்டம், ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே தனியாருக்கு சொந்த மான ஒரு சிற்ப கலைக்கூடம் உள்ளது. இங்கு, நேற்று ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள மலையில் இருந்து வெளியேறிய நாகப்பாம்பு ஒன்று சிற்ப கலைக்கூடத்திற்குள் புகுந்தது.

    இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது பாம்பை பார்த்த சிற்ப கலைக்கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாய் ஒன்று, அதனை கடித்தது.

    அப்போ து, பாம்பு படம் எடுத்து அந்த நாயை தீண்ட முற்பட்டது. இதில் பாம்புக்கும், நாய்க்கும் ஆக்ரோஷ சண்டை ஏற்பட்டது. பரபரப்பான இந்த சண்டையில் கடும் கோபத்தில் இருந்த நாய், பாம்பை கடித்து குதறியது. நீண்ட நேரம் பாம்பை நாய் கடித்து குதறியதால், சிறிது நேரத்தில் அந்த பாம்பு அங்கேயே உயிரிழந்தது.

    பாம்பு உயிரிழந்த பின்புதான், அந்த நாய் சமாதானமடைந்தது. இந்த சம்பவம் காரணமாக,. சிற்பக்கூடத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும்,அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களும் அச்சம் விலகாமலேயே காணப்பட்டனர்.

    • இந்த ஆண்டு, வருஷாபிஷேக விழா வருகிற 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    • குத்து விளக்குகளுக்கு அலங்காரங்கள் செய்து தீபம் ஏற்றி கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல், இந்த ஆண்டு, வருஷாபிஷேக விழா வருகிற 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, முன்னதாக நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 350 சுமங்கலி பெண்கள், தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்குகளுக்கு அலங்காரங்கள் செய்து தீபம் ஏற்றி கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர்.

    வேத விற்பனர்கள் மந்திரங்களை உச்சரிக்க அதனைத்தொடர்ந்து சுமங்கலிகள் மந்திரங்களை உச்சரித்தவாறு குங்குமம், மஞ்சள், மலர்கள், அக்ஷதை ஆகியவற்றை கொண்டு திருவிளக்கிற்கு அர்ச்சனை செய்தனர்.

    இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ரவியை கைது செய்த போலீசார், அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
    • அரசின் இலவச அரிசி வாங்கி வந்து, அதை ரைஸ்மில்லில் ேபாலீஸ் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, எஸ்.ஐ.க்கள் மூர்த்தி, கிருஷ்ணவேணி, நேரு மற்றும் போலீசார், காவேரிப்பட்டணம் கோட்டை தெருவை சேர்ந்த ரவி (55) என்பவரை வாடகைக்கு எடுத்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 50 கிலோ எடை கொண்ட, 8 பைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரவியை கைது செய்த போலீசார், அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காவேரிப்பட்டணம் மற்றும் அகரம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீடு, வீடாக சென்று, குறைந்த விலைக்கு தமிழக அரசின் இலவச அரிசி வாங்கி வந்து, அதை ரைஸ்மில்லில் ேபாலீஸ் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதை நம்பி20 லட்சத்து 85 ஆயிரத்து 618 ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் துருவாத நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது49). இவருக்கு வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வருகிறது. மேலும் இந்த பகுதி நேர வேலையில் குறைந்த முதலீட்டு அதிக லாக் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ராம்குமார் ரூ.20 லட்சத்து 35 ஆயிரம் அவரது வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.

    இதேபோல் ஓசூர் ஆட்கோ பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கும் வாட்ஸ் அப்பில் ஹோட்டல்களுக்கான கூகுள் ஆப் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாக மெசேஜ் வந்தது.

    மேலும் இதை நம்பி20 லட்சத்து 85 ஆயிரத்து 618 ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் தான் தான் ஏமாற்றம் அடைந்தது ெதரியவந்தது.

    மேலும் மூக்கண்ணப்பள்ளி சேர்ந்தவர் மகாலட்சுமி (31), இவருக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக எஸ்எம்எஸ் வந்தது. இந்த வேலையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய், பகுதி நேரம் என்றால் 5000 ரூபாய் என்று கூறி ஆசை வார்த்தை உள்ளார்.

    இதை நம்பி இவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 8 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக்கு அனுப்பியுள்ளார். இதனால் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரி சைபர் கிராம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நிறுத்தி வைக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையை ஒப்படைத்து, அதற்குரிய ஊதியத்தினை உடனே வழங்க வேண்டும்.
    • இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட கிளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருண்பிரகாஷ்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சிக்கண்ணா வரவேற்புரையாற்றினார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட வலைதள நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் கோபி நிறைவு செய்து பேசினார். முடிவில், மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

    இந்தப் போராட்டத்தின் போது, நாடு முழுவதும் உள்ள பங்களிப்பினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் (தொடக்க கல்வி) மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனே நிறுத்தி வைக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையை ஒப்படைத்து, அதற்குரிய ஊதியத்தினை உடனே வழங்க வேண்டும்.

    பள்ளி இணைப்புகள், கற்பித்தலுக்கு தன்னார்வலர்கள் நியமனம், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் பணியமர்த்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை 2020-ல் இருந்து நீக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    • தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சிற்பாக பணியாற்றிய உதவி திட்ட அலுவலர்கள், அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
    • மொத்தம் ரூ. 30 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வங்கியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநில தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மேலாண்மை அலகு சார்பாக 2021-22 ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட முதல் விருது இந்தியன், இரண்டாம் விருது பெற்ற தமிழ்நாடு கிராம வங்கிக்கும் கேடயம் மற்றும் வங்கி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

    இதே போல், கிளை வங்கிகளில் முதல் விருது பெற்ற கிருஷ்ணகிரி கிளை தமிழ்நாடு கிராமத்திற்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை, இரண்டாம் விருது பெற்ற காவேரிப்பட்டணம் இந்திய வங்கிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை, மூன்றாம் விருது பெற்ற குந்தாரப்பள்ளி கிளை இந்தியன் வங்கிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை என மொத்தம் ரூ. 30 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சிற்பாக பணியாற்றிய உதவி திட்ட அலுவலர்கள், அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஜாகீர்உசேன், இந்தியன் வங்கி மண்டல துணை பொது மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், உதவி திட்ட அலுவலர்கள் பிரபாகர், இளங்கோ, பெருமாள் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×