என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்தவர் சிக்கினார்
- ரவியை கைது செய்த போலீசார், அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
- அரசின் இலவச அரிசி வாங்கி வந்து, அதை ரைஸ்மில்லில் ேபாலீஸ் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, எஸ்.ஐ.க்கள் மூர்த்தி, கிருஷ்ணவேணி, நேரு மற்றும் போலீசார், காவேரிப்பட்டணம் கோட்டை தெருவை சேர்ந்த ரவி (55) என்பவரை வாடகைக்கு எடுத்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 50 கிலோ எடை கொண்ட, 8 பைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரவியை கைது செய்த போலீசார், அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காவேரிப்பட்டணம் மற்றும் அகரம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீடு, வீடாக சென்று, குறைந்த விலைக்கு தமிழக அரசின் இலவச அரிசி வாங்கி வந்து, அதை ரைஸ்மில்லில் ேபாலீஸ் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






