என் மலர்
நீங்கள் தேடியது "நபர் சிக்கினார்"
- ரவியை கைது செய்த போலீசார், அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
- அரசின் இலவச அரிசி வாங்கி வந்து, அதை ரைஸ்மில்லில் ேபாலீஸ் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, எஸ்.ஐ.க்கள் மூர்த்தி, கிருஷ்ணவேணி, நேரு மற்றும் போலீசார், காவேரிப்பட்டணம் கோட்டை தெருவை சேர்ந்த ரவி (55) என்பவரை வாடகைக்கு எடுத்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 50 கிலோ எடை கொண்ட, 8 பைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரவியை கைது செய்த போலீசார், அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காவேரிப்பட்டணம் மற்றும் அகரம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீடு, வீடாக சென்று, குறைந்த விலைக்கு தமிழக அரசின் இலவச அரிசி வாங்கி வந்து, அதை ரைஸ்மில்லில் ேபாலீஸ் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொரப்பூர் காப்புக்காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- இளவரசன் என்பவர் மான்களை வேட்டை யாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரிய வந்தது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மொரப்பூர் வனசரகத்திற்குட்பட்ட கீழ் மொரப்பூர் காப்புக்காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் புதிய நகரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் மான்களை வேட்டை யாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவுப்படி இளவரசனுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.






