என் மலர்
கிருஷ்ணகிரி
- அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது.
- மர்ம நபர்கள் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்தது தெரியவந்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் குமுதா, வருவாய் அலுவலர் ராஜக்குமார் ஆகியோர் விரைந்து சென்று பார்வை யிட்டனர்.
அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்தது தெரியவந்தது.
இதனால் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 10க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 100க்கும் மேற்பட்ட கோழிகளையும் பலியிட்டனர்.
- பலியிட்ட ஆடுகள் மற்றும் கோழிகளின் இறைச்சிகளைக் கொண்டு கோயில் அருகில் சமைத்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கறி விருந்து படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் 3ம் ஆண்டு மெகா கறி விருந்து திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தன. பின்னர் கோயில் முன்பு விழாக்குழுவின் சார்பில் 35 ஆடுகளை பலியிட்டனர். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற 10க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 100க்கும் மேற்பட்ட கோழிகளையும் பலியிட்டனர். பலியிட்ட ஆடுகள் மற்றும் கோழிகளின் இறைச்சிகளைக் கொண்டு கோயில் அருகில் சமைத்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கறி விருந்து படைத்தனர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விருந்தில் கலந்து கொண்டவர்கள் மொய் எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை மகாராஜகடை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
- குடும்பத் தகராறில்கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிஷோர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கணேச காலனியைச் சேர்ந்த கிஷோர் (வயது36), இவர் கடந்த 10 வருடங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் குடும்பத் தகராறில்கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிஷோர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அவரது அம்மா குணவதி (54) கொடுத்த புகார்படி கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி அருகே நாரலப்பள்ளியை சேர்ந்த டிரைவர் பயாஷ், என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார்.
- பயணிகள் அலரி அடித்து கதவு, ஜன்னல் வழியாக வெளியில் குதித்தனர்
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து பேரிகை வழியாக பெங்களூருக்கு நேற்று மதியம் தனியார் பஸ் சென்றது.
இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கிருஷ்ணகிரி அருகே நாரலப்பள்ளியை சேர்ந்த டிரைவர் பயாஷ், என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். சூளகிரி அடுத்த புலியரசி பகுதியில் வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணிகள் அலரி அடித்து கதவு, ஜன்னல் வழியாக வெளியில் குதித்தனர். இதல் செட்டிபள்ளி, அத்திமுகம், பேரிகை பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் பானு, யசோதா, நீத்தித்தா, ப்ரியங்கா, ராணி, கிருஷ்ணமூர்த்தி, பாவனா உள்பட பலபேருககு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவ கல்லுரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.7,000 முதல் 8,000 வரை விற்பனையானது.
- கடந்த வாரம் ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வாரச்சந்தையில் தங்கம் முதல் தக்காளி வரை விற்பனை செய்யப்படுகிறது.
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தையில் ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கிறது.
இந்த சந்தை தமிழகத்தில் மிகப்பெரிய சந்தை ஆகும். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு அதிகாலை முதலே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.
இதை சேலம், ஈரோடு, திருபத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.
இதனிடையே நாளை மறுநாள் (புதன்கிழமை) யுகாதி பண்டிகையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் கொண்டாடுவது வழக்கம்.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் யுகாதி பண்டிகை கொண்டாடி வருகிறார்கள். யுகாதி பண்டிகை முன்னிட்டு கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறி விருந்துக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கறி விருந்து வைப்பது வழக்கம்.
இதனால் நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.7,000 முதல் 8,000 வரை விற்பனையானது. கடந்த வாரம் ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
யுகாதி பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ஒரு ஆட்டின் மீது ஆயிரம் ரூபாய் விலை அதிகரித்தது. இதனால் நேற்று மட்டும் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
- தமிழில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 236 மையங்களில் நடந்த தேர்வினை 2,346 பேர் எழுதினர்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு, அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கான பாட திட்டத்தில், தமிழில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கணித பாடம் மற்றும் உடல்நலம் காப்போம் பகுதியும், அவசரகால தொலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இத்திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நேற்று 236 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டன. இதில் 2,346 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
- மனநலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரில் இருந்து உள்ளார்.
- ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ். இவரது மகன் குமார் (வயது28), இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரில் இருந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி தேன்கனிக்கோட்டை தொட்டக்கான் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- டாஸ்மாக் கடையில் புகுந்து மாதேஷ் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
- கல்லா பெட்டியில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கம், 3, மதுபெட்டிகள் மற்றும் செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்து சென்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தபால் மேடு என்னும் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் கல்லாவியை எடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (48) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். சூப்பர் வைசராக கிருஷ்ணன் என்பவர் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பவர் மதுவிற்பனை படுஜோராக நடந்தது. வழக்கத்தை விட குடிமகன்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதையடுத்து இரவு திடீரென மர்ம நபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர். பின்னர் டாஸ்மாக் கடையில் புகுந்து மாதேஷ் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் கல்லா பெட்டியில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கம், 3, மதுபெட்டிகள் மற்றும் செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டனர். அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ள காட்சியை பார்த்தனர்.
மர்ம நபர்கள் முகமூடி அணிந்து நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அந்த கொள்ளை யர்களை விரைந்து பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.
நள்ளிரவு டாஸ்மாக் கடையில் கொள்ளை யடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அக்கிராமத்திலேயே பகுதி நேர ரேஷன் கடையை வாடகை கட்டடத்தில் அமைத்துள்ளனர்.
- ரேஷன் கடை கட்டுவதற்கான பணியை நேற்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் மோரமடுகு பஞ்சாயத்து உஸ்தலஹள்ளி கிராமத்தில் 160 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக 4 கி.மீ., தொலைவில் உள்ள அகரம் கிராமத்திற்கு சென்று வந்தனர். இதனால் தங்கள் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்திலேயே பகுதி நேர ரேஷன் கடையை வாடகை கட்டடத்தில் அமைத்துள்ளனர். இதையடுத்து கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்காக இடத்தை பொதுமக்கள் அளித்தனர். அங்கு, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணியை நேற்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதே போல், கிருஷ்ணகிரி பையனப்பள்ளி பஞ்சாயத்து திருமலை நகரில் ரூ.5 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணியை துவக்கி வைக்க சென்ற எம்எல்ஏ., அசோக்குமாரிடம், அப்பகுதி மக்கள் சாக்கடைக் கால்வாயை அமைத்த பிறகு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பஞ்சாயத்து நிதி மற்றும் எம்எல்ஏ., நிதியில் இருந்து முதலில் சாக்கடைக் கால்வாயை அமைத்த பிறகு சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து இதற்கான பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கவுன்சிலர்கள் காசி, ஜெயராமன், பஞ்., தலைவர் பிரதாப், துணைத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
- பைக் மோதியதில் ஆனந்தப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேடரப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜய் (வயது46), அவரது தந்தை ஆனந்தப்பா 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நகைகடை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் பைக் மோதியதில் ஆனந்தப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதே போல் ஓசூர் அருகே உள்ள சென்னத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்ப்பா (வயது57) இவர் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரி வந்த வாகனம் இவர் மீது மோதி வெங்கடேசப்பா படுகாயம் அடைந்தார் உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போகும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கண்காணிக்கப்பட்டு வந்தாலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களை அதிக அளவில் தடுக்க முடிவதில்லை.
- காவல்துறையில் மோப்ப நாய்களை பயன்படுத்துவது போன்று, ஓசூர் வனக்கோட்டத்திலும் மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 504.33 ச.கி.மீ மற்றும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 686.40 ச.கி.மீ என மொத்த பரபரப்பு 1501 சதுர கி.மீ உள்ளது.
இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும், 172 வகையான வண்ணத்து பூச்சிகளும் காணப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள், எறும்பு திண்ணிகள், சிறுத்தைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல்நிற அணில்கள், எகிப்திய கழுகுகள் போன்றவையும் காணப்படுகின்றன. அதேபோல் சந்தனம் மற்றும் செம்மரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் உள்ளன.
இந்த வனப்பகுதிகள் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்துடன் இணைந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடுதல், மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்குக் கடத்துவது என பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன.
இதனைத் தடுக்க வனப்பகுதிகளிலும், மாநில எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கபட்டு வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தாலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களை அதிக அளவில் தடுக்க முடிவதில்லை.
இதன் காரணமாக, காவல்துறையில் மோப்ப நாய்களை பயன்படுத்துவது போன்று, ஓசூர் வனக்கோட்டத்திலும் மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஓசூர் மாநில எல்லை பகுதிகளில் வாகனங்களைச் சோதனை செய்வதில் மோப்ப நாய் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து ஓசூர் வனசரகர் ரவி கூறும் போது, கொலை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் மோப்ப நாய் பயன்படுத்துவது போன்று, வனத்துறை சார்பிலும் கடத்தல் மற்றும் வனவிலங்குகளை வேட்டையடுவதை தடுக்கவும் மோப்ப நாயை பயன்படுத்த தேனியில் உள்ள வனத்துறை கல்லூரியில் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்களுக்கு கடந்த 6 மாங்களாக பயிற்சியளிக்கப்பட்டு வந்தது.
பயிற்சி பெற்ற மோப்ப நாய் ஓசூர் வனக்கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு பாரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அந்த நாயை வைத்து தமிழகத்திலிருந்து கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சந்தன மரங்கள் மற்றும் செம்மரங்கள், உடும்பு, மான்கறி, யானை தந்தம் போன்ற வனபொருட்கள் ஏதாவது எடுத்துச் செல்லப்படுகின்றனவா என ஜூஜூவாடி, பேரிகை, அந்திவாடி போன்ற மாநில எல்லைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்.
இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சொகுசு பேருந்துகள் மூலம் கடத்தல் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கவும் மோப்ப நாயைப் பயன்படுத்த உள்ளோம். மேலும், நாட்டு துப்பாக்கி, கள்ளத் துப்பாக்கி, வெடிபொருட்கள் போன்றவை பதுக்கப்படுவதை கண்டுபிடிக்கவும், பாரியை பயன்படுத்த உள்ளோம். இதன் மூலம் வனப்பகுதியில் நடக்கும் சமூகவிரோத செயல்களை பெரிய அளவில் தடுக்க முடியும் என்றார்.
- அங்கு உள்ள ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
- சுபதர்மேடு பகுதி சேர்ந்த ராமன்(44) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை போலீஸ்சார் கிருஷ்ணகிரி- சென்னை சாலை சுபேதார்மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து சுபதர்மேடு பகுதி சேர்ந்த ராமன்(44) என்பவரை கைது செய்தனர்.
மேலும் இதே போல் கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே தடை செய்யப்பட்ட புகையில பொருளை விற்பனைசெய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை சேர்ந்த கல்பேஷ்(26)என்பது தெரியவந்தது இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.






