என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து
    X

    சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்தை படத்தில் காணலாம்.

    தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

    • கிருஷ்ணகிரி அருகே நாரலப்பள்ளியை சேர்ந்த டிரைவர் பயாஷ், என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார்.
    • பயணிகள் அலரி அடித்து கதவு, ஜன்னல் வழியாக வெளியில் குதித்தனர்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து பேரிகை வழியாக பெங்களூருக்கு நேற்று மதியம் தனியார் பஸ் சென்றது.

    இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கிருஷ்ணகிரி அருகே நாரலப்பள்ளியை சேர்ந்த டிரைவர் பயாஷ், என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். சூளகிரி அடுத்த புலியரசி பகுதியில் வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பயணிகள் அலரி அடித்து கதவு, ஜன்னல் வழியாக வெளியில் குதித்தனர். இதல் செட்டிபள்ளி, அத்திமுகம், பேரிகை பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் பானு, யசோதா, நீத்தித்தா, ப்ரியங்கா, ராணி, கிருஷ்ணமூர்த்தி, பாவனா உள்பட பலபேருககு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவ கல்லுரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×