என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடி தாக்கியதில் தீப்பிடித்த தென்னை மரம்
- ஒரு விவசாய நிலத்தில் தென்னை மரத்தில் திடீரென இடி தாக்கியது.
- மரத்தின் உச்சியில் தீ பிடித்து சருகுகள் எரிந்து நெருப்பு பொறிகள் கீழே தரையில் விழுந்தன.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் நேற்று திடீர் மழை பெய்தது. இந்த நிலையில் மாலையில் சூளகிரி அருகே நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தென்னை மரத்தில் திடீரென இடி தாக்கியது.
இதில் மரத்தின் உச்சியில் தீ பிடித்து சருகுகள் எரிந்து நெருப்பு பொறிகள் கீழே தரையில் விழுந்தன. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிச்சியடைந்தனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






