என் மலர்
உள்ளூர் செய்திகள்

குந்தாரப்பள்ளி அரசு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
- விழாவில் குந்தாரப்பள்ளி சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்.
- விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா விமர்சியாக நடைபெற்றது.
இப்பள்ளி ஆரம்பித்து 76 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து கொரோனா பாதிப்பிற்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் பள்ளியாக இப்பள்ளியில் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு விழாவில் தமிழக எல்லைப் பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மாநில மொழிகளிலும் குழந்தைகள் நடனமாடி பொதுமக்களை கவர்ந்தனர். இந்த ஆண்டு விழாவில் குந்தாரப்பள்ளி சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பர்களாக இப்பள்ளியில் பயின்ற வழக்கறினர் பாண்டியன், சரஸ்வதி பள்ளி தாளாளர் அன்பரசு, சிவகாமியம்மாள் கல்லூரி தா ளாளர் குமரன், அகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆண்டு விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள், குந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமா னோர் கலந்து கொ ண்டனர்.






