என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில்மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் வழங்கினார்.
- வரவாற்று சிறப்புகளை அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசுத்துறையின் உயர் பதவிகளுக்கு உயர வேண்டும்.
ஓசூர்.
ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், "மாபெரும் தமிழ்க் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்சிக்கு, ஓசூர் சப் - கலெக்டர் சரண்யா தலைமை தாங்கினார். இதில், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, "சமூகமும், கல்லூரிக்கு வெளியே கல்வி" என்ற தலைப்பிலும், ஊடகவியலாளர் சமஸ், "தமிழ் வரலாறு என்ன சொல்கிறது? என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.
விழாவில், சப்- கலெக்டர் சரண்யா பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மரபும்-நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும், வளர்ச்சியும், சுற்றுலா வாய்ப்புகள், அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நடைபெறுகிறது.
மாணவ,மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் சொற்பொறிவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தும், மாபெரும் தமிழ்க் கனவு காணொளியை கண்டும், வரவாற்று சிறப்புகளை அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசுத்துறையின் உயர் பதவிகளுக்கு உயர வேண்டும்.
இவ்வாறு சப்- கலெக்டர் சரண்யா பேசினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் தமிழ்ப் பெருமிதம் குறித்தும், கேள்வி, பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் வழங்கினார்.
இதில், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, தனி தாசில்தார்கள் பெருமாள், ரமேஷ், கல்லூரி முதல்வர் டாக்டர் ஹெலன், உதவி பேராசிரியர் (தமிழ்த்துறை) எழிலரசி மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் மற்றும் தளிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 8 கல்லூரிகளை சேர்ந்த 1,000 மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர்.