என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு இடையூறு செய்த 3 பேர் கைது
    X

    பொதுமக்களுக்கு இடையூறு செய்த 3 பேர் கைது

    • மத்திகிரி போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நின்றுகொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

    அப்போது எஸ்.முத்துகானப்பள்ளியில் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு பொதுமக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் வகையில் நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(26), யாரப்பாஷா (27) ஆகிய 2பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல் சூளகிரி போலீசார் சர்ச் சாலை, டேம்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நின்றுகொண்டிருந்த போகிபுரம் பகுதியை சேர்ந்த முரளி(30) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×