என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
- 26 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் பூமி பூஜை செய்து இப்பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கூலியம் பஞ்சாயத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், அம்மனேரி கிராமத்தில் 6 லட்சத்து 68 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், மற்றொரு இடத்தில் 4 லட்சத்து 93 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும், 3 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாயும், ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு இடங்களில், முள்கம்பி வேலி மற்றும் கிரீன் செட்டும், சவுளூரில் 9 லட்சத்து 60 ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலையும் என மொத்தம், 26 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் பூமி பூஜை செய்து இப்பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கவுன்சிலர்கள் மகேந்திரன், காசி, பஞ்சாயத்து தலைவர் சுமதி ரமேஷ், துணைத் தலைவர் மாதப்பன், பாசறை கிருஷ்ணன், ஒம்பலக்கட்டு ராஜி, ஐடி பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், ஐடி பிரிவு ஒன்றிய தலைவர் பரமசிவம், செம்படமுத்துார் துணைத் தலைவர் மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.






