என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் பெண்கள் உள்பட 5 பேர் மாயம்
- தாயாருக்கும் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு மகனுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
- குடும்பத்தகராறு ஏற்பட்டு மன வேதனை அடைந்த தேவி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளி எழில் நகர் பகுதி சேர்ந்த ஷகினா(வயது24). இவரது கணவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார் . இந்நிலையில் தனது இரண்டு வயது மகனுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஷகினாவுக்கும், அவரது தாயாருக்கும் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு மகனுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் குல்ஜார் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் ராயக்கோட்டை அருகே உள்ள அட்டகுறிக்கியை சேர்ந்த வெங்கடேசன். இவரது மகன் வேணுகோபால் (வயது28). இவர் சூளகிரி அருகே உள்ள நெல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் முனியம்மா கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கீழ்கோட்டை யாரப்பநகர் பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி கணேஷ் (வயது30) இருக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் கடந்த 11-ம் தேதி கொத்தனார் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் தேடியும் கணேஷ் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே உள்ள காடிப்பாளையம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி தேவி (வயது 24). இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மன வேதனை அடைந்த தேவி கடந்த 11-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






