search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவின் பால் தட்டுப்பாட்டால் 30 லட்சம் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்- கே.பி.முனுசாமி பேட்டி
    X

    ஆவின் பால் தட்டுப்பாட்டால் 30 லட்சம் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்- கே.பி.முனுசாமி பேட்டி

    • யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இன்றைக்கு அதிகார துஷ்பிரயோகம் ஏற்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் அ.தி.மு.க. துவங்கிவிட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி கூறியதாவது:-

    ஆவின் பால் தட்டுப்பாடு செயற்கையான முறை என்பதுடன் தவறான கையாளுகின்றதால் மிகப்பெரிய அளவில் ஆவின் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30 லட்சம் ஆவின் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு எல்லா துறைகளிலும் உரிய முறையில் செயல்படாத காரணத்தினால் திறமையான அதிகாரிகள் பணிய மறுத்த காரணத்தினால் தனக்கு வேண்டியவர்களை பணியில் அமருவதால் ஒவ்வொரு துறையும் செயல் இழந்துள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்திருப்பது எவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதில் முறையாக செயல்படவில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சுமத்துகிறார். அதற்கு எடப்பாடி பொறுமையாக இருக்கிறார். யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இன்றைக்கு அதிகார துஷ்பிரயோகம் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் ஆணவ தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள்.

    அப்படி நடக்கும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களுக்கு சில இடங்களில் காவல்துறையும் உறுதுணையாக இருக்கும். இதனால் மென்மேலும் தவறுகள் செய்ய வாய்ப்பு இருக்கும். அப்படி சட்டம் ஒழுங்கு பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆளும் கட்சியினர். முதலமைச்சருக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன். இதில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் அவரது ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்படும்.

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் அ.தி.மு.க. துவங்கிவிட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட அளவில் ஒன்றிய அளவில் சார்பு அணிகள் ஆலோசனை நடத்தி எப்படி தேர்தலில் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கி பம்பரம் போல் செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×