என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு மாடுகளை திருடும் கும்பல்"

    • நத்தம் கிராமத்திலும் தொடர்ந்து மூன்று நாட்களாக 3 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.
    • போலீசாரிடம் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஆனது கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அருகில் எல்லைப் பகுதி அமைந்திருக்கிறது.

    இதனால் இப்பகுதியில் அதிக அளவில் ஆடு மாடுகள் பொதுமக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அனைத்து வீடுகளிலும் ஆடு, மாடுகளை விவசாயிகள் பெருமளவில் வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வீடுகளில் வளர்க்கும் ஆடு மாடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் சிலர் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் திருடி செல்வது அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கத்திரிப்பள்ளி கிராமத்தில் முருகேசன் என்பவருடைய ஒரு பசு மாடும், அதே கிராமத்தில் சோபா என்பவருடைய 2 பசு மாடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பண்ணப்பள்ளி கிராமத்தில் திம்மக்கா என்பவருடைய பசுமாட்டை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் இதேப்போல் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உண்டிகை நத்தம் கிராமத்திலும் தொடர்ந்து மூன்று நாட்களாக 3 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் போலீசாரிடம் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் புகார்களை மட்டும் பெற்றுக்கொண்டு மௌனமாக இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

    மேலும் உடனடியாக ஆடு மாடுகளை திருடி செல்லும் மர்ம கும்பலைப் உடனடியாக பிடிக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும் தொடர்ந்து ஆடுகள் மாடுகள் திருடு போவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் அச்சத்தில் இரவு தூங்காமல் காவல் காத்து வருகின்றனர்.

    ×