ஓசூரில் வாகனம் மோதி தூய்மை பணியாளர் சாவு

அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.சிகிச்சை பலனின்றி நேற்று பெரியண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூரில் வாகனம் மோதி தூய்மை பணியாளர் சாவு
Published on

தருமபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது45). இவர் ஓசூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று தளிசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பெரியண்ணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பெரியண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com