என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரியில் மூழ்கி குழந்தை பலியான பரிதாபம்
- சுமார் 1 மணி நேரத்திறகு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
- டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டது என தெரியவந்தது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கொசமேட்டை சேர்ந்தவர் சபீர். கூலி தொழிலாளி. இவரது மகன் சபாஷ் (வயது3). நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை திடிரென மாயமானது.
இதனால் பெற்றோர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது வீட்டின் பின்புறம் உள்ள எள்ளூகுட்டை ஏரியில் குழந்தை மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கிருஷ்ணகிரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் குழந்தையை தேடினர்.
சுமார் 1 மணி நேரத்திறகு பிறகு தீயணைப்பு படையினர் குழத்தையை அனைத்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டது என தெரியவந்தது.
இதுகுறிந்து, காவேரிப்பட்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டு அருகே விளையாடி, கொண்டு இருந்த குழந்தை ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






