search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரிலிருத்து தினசரி, திருப்பதிக்கு ஆன்மீக பயணம்
    X

    ஓசூரிலிருத்து தினசரி, திருப்பதிக்கு ஆன்மீக பயணம்

    • ஓசூரில் இருந்து முதன்முறையாக இந்த ஆன்மீக பயணம் தொடங்கப்பட உள்ளது.
    • தனி நபருக்கு ரூ.2,800- சிறுவர்களுக்கு ரூ. 2,500- வசூலிக்கப்படுகிறது.

    ஓசூர்,

    ஓசூரில் இருந்து முதன்முறையாக வருகிற 17-ந்தேதி முதல், தினசரி திருமலை திருப்பதிக்கு ஆன்மிக பயணம் செய்ய தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதந்தோறும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்கள் எளிதில் சென்று வர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒசூர் மேலாளரும், ஓசூர் ஹோட்டல் தமிழ்நாடு மேலாளருமான வசந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு தினசரி ஆன்மிக பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இளித்துறை ராமசந்திரன் வழிகாட்டுதலின்படி அறநிலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலர் டாக்டர் சந்திரமோகன்,

    நிர்வாகி இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோரின் உத்தரவின் பேரில், ஓசூரில் இருந்து முதன்முறையாக இந்த ஆன்மீக பயணம் தொடங்கப்பட உள்ளது.

    ஒசூரில் இருந்து திருமலை திருப்பதிக்கு அழைத்துச்சென்று

    வர சொகுசுப் பேருந்து பயணம், சாமியை தரிசனம் செய்ய கட்டணம், உணவு என இதற்கான கட்டணமாக தனி நபருக்கு ரூ.2,800- சிறுவர்களுக்கு ரூ. 2,500- வசூலிக்கப்படுகிறது.

    முதல் நாள் இரவு ஓசூரிலிருந்துகிளம்பும் பேருந்து, விடியற்காலை 4 மணியளவில் கீழ் திருப்பதியில் உள்ள ஒட்டலுக்கு சென்றடையும்.

    அங்கு காலை சிற்றுண்டி முடித்து, திருச்சானூர் அலமேலு மங்கம்மாபுரத்தை தரிசித்த பின் மலையில் உள்ள ஏழுமலையானை தரிசித்து மீண்டும் இரவு 11 மணியளவில் ஓசூருக்கு வந்தடையும்.

    இந்த தினசரி ஆன்மிக பயணம் குறித்து அறிய, ஓசூர் தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள அலுவலக எண் 7845835847 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ அல்லது நேரில்வந்தோ தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதியை, ஓசூர் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு, மேலாளர் வசந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×