என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தொடங்கி வைத்தார்.
மேலுமலை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
- தங்கள் பகுதியில் போதிய சாலை வசதி இல்லை என்று கடந்த மாதம் சேர்மனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
- சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா வேப்பன ஹள்ளி தொகுதி மேலுமலை ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் தங்கள் பகுதியில் போதிய சாலை வசதி இல்லை என்று கடந்த மாதம் சேர்மனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து அந்த கோரிக்கையை சேர்மன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை ஆகியற்றை அமைத்து தருவதாக உறுதியளித்திருந்தனர்.
அதனடிப்படையில் சாமல்பள்ளம் கிராமத்தில் இருந்து சீக்கலபள்ளி செல்லும் சாலையின் மெடிக்கல் முதல் விஜயன் வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்க சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், மேலுமலை கிராமத்தில் சந்திரன் வீடு முதல் மாரியம்மன் கோவில் வரை சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிெமண்ட் சாலையும்,
ஆண்டியப்பன் கோட்டை கிராமத்தில் முனிப்பா வீடு முதல் கோவில் வரை சுமார் ரூ.5 லட்சம் மதீப்பீட்டில் சிமெண்ட் சாலை ஆகிய பணிகளுக்கு ஒன்றிய பொது நிதி நிதியிலிருந்துநிதி ஒதுக்கப்பட்டு ஒன்றிய குழு உறுப்பினர் சேட்டு தலைமையில் சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அப்பகுதி மக்கள் அனைவரும் நன்றியினையும் தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொறியாளர் வெங்கடேசன், முன்னால்கவுன்சிலல் லோகேஷ், வார்டு உறுப்பினர் மாதம்மாள், விஜியன், ஊர் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.






