என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்களின் பிரச்சினைகளை பா.ஜனதா தட்டி கேட்கும்: அண்ணாமலை
- 2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
- இது தொண்டர்களுக்கான கட்சி.
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதா தனி முத்திரை பதித்து வருகிறது. எதிர்த்து குரல் கொடுக்கிறோம். ஒரு தொண்டன் எதிர்த்து கேட்கிறான். சிறை செல்கிறான். மீண்டும் வெளியே வந்து எதிர்த்து கேட்கிறான்.
மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்போம். அதற்காக எந்த பிரச்சினைகள் வந்தாலும் தயங்க மாட்டோம். இது தொண்டர்களுக்கான கட்சி. இதை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது.
தி.மு.க. அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இன்னும் 12 மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வர உள்ளது. விவசாயிகளுக்கு, மகளிருக்கு, இளைஞர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை மோடி நிறைவேற்றி உள்ளார். 2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் வேகமாக பணியாற்ற வேண்டும்.
அடிமட்டத்தில் இருந்து நாம் கட்சியை பலப்படுத்திட வேண்டும். நமது கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பணியாற்ற வேண்டும். நமது கூட்டணி எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு நாம் அனுப்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து செல்லும் உங்களுக்கான அரசாக பா.ஜனதா உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.






