search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
    X

    கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

    • ரூ.81 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வழங்கு கால்வாய் திட்டபணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
    • செல்லக்குமார் எம்.பி., எம்எல்ஏ.க்கள் பர்கூர் மதியழகன், ஊத்தங்கரை தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாக்களில் உள்ள 33 ஏரிகள் மற்றும் 8 தடுப்பணைகளுக்கு பாரூர் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.81 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.

    இதையடுத்து நேற்று போச்சம்பள்ளி தாலுகா பாரூர் ஏரியின் கிழக்கு பிரதான கால்வாய் நெடுகை 15.95 கி.மீட்டரில் இடது வலது புறத்தில் ஒரு புதிய வழங்கு கால்வாய் வெட்டி, பெண்ணையாற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை தாலுகாக்களில் உள்ள 33 ஏரிகள் மற்றும் 8 தடுப்பணைகள் ஆகியவற்றிற்கு கொண்டு சென்று பயன்பெறும் வகையில் ரூ.81 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வழங்கு கால்வாய் திட்டபணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    செல்லக்குமார் எம்.பி., எம்எல்ஏ.க்கள் பர்கூர் மதியழகன், ஊத்தங்கரை தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ., நரசிம்மன், ஒன்றிய குழு தலைவர்கள் மத்தூர் விஜயலட்சுமி பெருமாள், ஊத்தங்கரை உஷாராணி குமரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கதிரவன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரஜினிசெல்வம், நடராஜன், சந்தோஷ், அன்பழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் லதா, நந்தினி, தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், துரைசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் வசந்தரசு, சாந்தமூர்த்தி, குமரேசன் மற்றும் டாக்டர்.தென்னரசு, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×