search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காணொலி வாயிலாக 10 மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு- ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்
    X

    கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு சால்வை அணிந்து வரவேற்ற காட்சி. அருகில் மத்திய மந்திரி எல். முருகன் உள்ளார்.

    காணொலி வாயிலாக 10 மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு- ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்

    • தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வழிநெடுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    • ஜே.பி.நட்டாவை வருகையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க இன்று கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூருரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் வந்து இறங்கினார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு அருகில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தை பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து 75 அடி உயர கம்பத்தில் பா.ஜனதா கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து காணொலி காட்சி மூலம் தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடந்தது.

    இந்த விழாவிற்கு பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மத்திய மந்திரி எல்.முருகன் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பா. ஜனதா தலைவர் கே.எஸ்.ஜி. சிவபிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், செய்தி தொடர்பாளர் நரசிம்மன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் அன்பரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ஜே.பி.நட்டாவை வருகையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் கடும் சோதனைக்கு பிறகே தொண்டர்களை உள்ளே அனுமதித்தனர்.

    தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வழிநெடுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    Next Story
    ×