என் மலர்
கிருஷ்ணகிரி
- ஆணவ படுகொலைக்கு எதிராக தடுப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீப காலமாக காதல் திருமணம் செய்பவர்கள் படுகொலை செய்யப்படுவது வருத்தம், வேதனையளிக்கிறது. குறிப்பாக, இங்குள்ள பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.
இது போன்ற குற்றங்கள் நிகழும், இந்த மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு கடுமையான இயக்கத்தை நடத்திட முடிவு செய்துள்ளது. வருகிற மே 3&ந் தேதி கிருஷ்ணகிரியில், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஆணவ படுகொலைக்கு எதிராக தடுப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு, தமிழக அரசு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். தி.மு.க. அமைச்சர்கள் மீது அண்ணாமலை ஊழல் புகார் கொடுப்பதற்கு, அவருக்கு அடிப்படை தகுதி உள்ளதா. மேலும், அவர் ஊழல் புகார் கொடுப்பார் என பார்த்தால், சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதை அவர்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது தான். வலைதளத்தில் உள்ளதை தொகுத்து கொடுப்பதற்கு ஒரு அண்ணாமலை தேவையா. ஊழலுக்கும், சொத்துக்கும் அண்ணாமலைக்கு வித்தியாசம் தெரியாதா. தமிழக கவர்னருக்கு எதை பேசுவது, எதை பேசக்கூடாது என்றே தெரியவில்லை.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதவை உரிய காலத்திற்குள் முடிவெடுத்து கொடுக்க வேண்டும் என்பதுதான் கவர்னரின் பணி. ஆனால் 15 மசோதாக்கள் ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் உள்ளது. எந்த வேலையை செய்ய வேண்டுமோ அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை செய்தால், கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவராகவோ, பா.ஜ.க. தலைவராகவோ வாங்க.
கவர்னராக இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசக் கூடாது. காரணம் பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களை இப்படி கவர்னர்களை பயன்படுத்தி ஆட்டம் போட வைக்கும் ஏற்பாடுதான். இது அரசாங்கத்தையே முடக்கி வைப்பது ஆகும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது அந்த கட்சியின் மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாதர் சங்க செயலாளர் ஆஞ்சலா மேரி ஆகியோர் உடனிருந்தனர்.
- பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும்.
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளில் பழச்சாறு வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கப்புகளில் மட்டுமே வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோடை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. அதனால், மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகளில் பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ள இந்த தருணத்தில் சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும்.
சாலையோர உணவு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம் குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப் பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும்.
மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி தேதியை உறுதிப்படுத்திட வேண்டும்.
முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி, பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளில் பழச்சாறு வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கப்புகளில் மட்டுமே வழங்க வேண்டும்.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும் போது வணிகர்கள் தரக்குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களில் வாய்ப்புறம் சீலிட்டு மூடியிருத்தல் மற்றும் காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும். மேலும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் குடிநீர் கொள்கலன்களை சூரிய ஒளிப்படும்படி வைக்கக் கூடாது.
இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் பழச்சாறுகளை வழங்க மாவட்ட நிர்வாகம், வணிகர்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, போதுமான அளவு உடலின் நலனை காக்க நீர் மோர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துதல் மிகவும் நலம் பயக்கும். எனவே, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகன் பார்த்திபன் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று ஓசூர்-பெங்களூர் சிப்காட் ஜங்சன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் உடனே அங்கு விரைந்து உடலை கபை்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 6 முதுநிலை ஆய்வாளர்கள் கொண்ட பறக்கும் படை ஆய்வு குழுக்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
- ஓசூர், கெலமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 64 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பொது வினியோக திட்ட துணை பதிவாளர் குமார், கிருஷ்ணகிரி சரக துணை பதிவாளர் செல்வம், ஓசூர் சரக துணை பதிவாளர் முரளிகண்ணன், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சுந்தரம், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் தமிழரசு, 16 கூட்டுறவு சார் பதிவாளர்கள், 6 முதுநிலை ஆய்வாளர்கள் கொண்ட பறக்கும் படை ஆய்வு குழுக்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்கள் ஓசூர், கெலமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 64 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் தவறு செய்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின் போது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பொது வினியோக திட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தெரிவித்து உள்ளார்.
- 5 நீர் உறிஞ்சு கிணறுகள் ஆற்றின் தரைமட்ட அளவு வரை முடிக்கப்பட்டுள்ளது.
- ஆற்றின் தரை மட்டத்திற்கு மேல் மூன்றரை மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் திட்டப்பணிகளுக்காக, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர் இருப்பை 43 அடியாக குறைக்க தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி ஒன்றியம் 15 ஊராட்சிகள், எண்ணேக்கொள்புதூர் மற்றும் 122 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ரூ.79 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறைந்தபட்ச தேவை நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தவளம் கிராமம் அருகே 6 நீர் உறிஞ்சுகிணறுகள் அமைக்கப்பட உள்ளது இதில், 5 நீர் உறிஞ்சு கிணறுகள் ஆற்றின் தரைமட்ட அளவு வரை முடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் தரை மட்டத்திற்கு மேல் மூன்றரை மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. இந்த கிணறுகள் அமைக்கும் பணிகளுக்காக, அணையின் நீர்மட்டத்தை 43 அடியாக குறைக்கப்படுகிறது.
இருப்பினும் இதனால் கிருஷ்ணகிரி அணையின் கீழ், முதல்போக பாசனத்திற்கும், குடிநீருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே குடிநீர் திட்டப் பணிக்காக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டத்தை 43 அடியாக குறைக்க அரசாணை பெறப்பட்டு நேற்று முன்தினம் முதல் 9 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து 350 கன அடியாக இருந்த நிலையில், அணையின் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 47.15 அடியாக நீர்மட்டம் இருந்தது.
- பெய்த கனமழை காரணமாக வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வரத்தால் ஒப்பந்ததாரர்கள் பணிகளை நிறுத்திவிட்டு சென்றனர்.
- காங்கீரிட் கம்பிகள் முற்றிலும் துரு பிடித்து கிடப்பில் கிடக்கிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள போகிபுரம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமமானது தீவு போல் அமைந்துள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலை, அலுவலகங்கள் போன்ற எந்த வசதியும் இல்லை. இதனால் இக்கிராம மக்கள் வெளியூர் செல்ல வேண்டி உள்ளது.
இதற்காக சின்னார் அணை செல்லும் வாய்க்காலை அரை கிலோமீட்டர் தண்ணீரில் பரிசல் மூலம் கடந்து செல்ல வேண்டும். இது மட்டுமில்லாமல் விவசாய பொருட்களை சந்தைக்கு பரிசல் மூலம் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் நிலை உள்ளது.
இதனையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பாலம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கடந்த ஆட்சியில் போகிபுரம் முதல் காமநாயக்கன பேட்டை வரையிலான பாலம் கட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் 2020-2021 ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு காங்கீரிட் தூண்கள் கட்டப்பட்டன.
இந்நிலையில் பெய்த கனமழை காரணமாக வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வரத்தால் ஒப்பந்ததாரர்கள் பணிகளை நிறுத்திவிட்டு சென்றனர்.
இதனையடுத்து காங்கீரிட் கம்பிகள் முற்றிலும் துரு பிடித்து கிடப்பில் கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பரிசலில் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கிடப்பில் ேபாடப்பட்ட பாலத்தை கட்டித்தர கோரிக்கை விடுக்கின்றனர்.
- வன ரோஜா தண்ணீர் எடுக்க குடிசை வீட்டுக்குள் செல்லும் பொழுது மர்ம நபர் அவர் பின்னாலே வீட்டிற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
- யாரும் இல்லாததை அறிந்த அந்த மர்ம நபர் வனராஜாவிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த இலக்கம்பட்டி கிராமத்தில் வெங்கட்ராமன். இவரது மனைவி வனரோஜா (வயது39).
இவர்களுக்கு கருக்கம்பட்டி கிராமத்தின் அருகே விளைநிலங்கள் உள்ளதால் பகல் நேரங்களில் அங்கே சென்று வருவது வழக்கம். நேற்று வழக்கம்போல் வனரோஜா தனது தோட்டத்தில் உள்ள குடிசைகள் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு உள்ளார்.
வன ரோஜா தண்ணீர் எடுக்க குடிசை வீட்டுக்குள் செல்லும் பொழுது மர்ம நபர் அவர் பின்னாலே வீட்டிற்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
யாரும் இல்லாததை அறிந்த அந்த மர்ம நபர் வனராஜாவிடம் சில்மிஷம் செய்துள்ளார். உடனே அந்தப் பெண் அருகிலுள்ள கட்டையை எடுத்து அடிக்கவே, மர்ம நபர் பதிலுக்கு குடிசையில் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து பெண்ணின் மண்டையில் பலமாக தாக்கி உள்ளார்.
இந்த தாக்குதலில் அந்தப் பெண் மண்டை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் அலறி உள்ளார்.
அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த அந்த நபர் கோடாரி வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வன ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தப் பெண் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த ஒரு வேனை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
- தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மினி சரக்கு வேனை வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே டிரைவரை பிடித்து விசாரித்ததில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கம்மாள தெருவைச் சேர்ந்த குமார் (வயது53) என்பவர் பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரத்திற்கு குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது.
உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 778 கிலோ குட்கா பொருட்களையும், வேனையும் பறிமுதல் செய்தனர். கடத்தி கொண்டு வரப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.8 லட்சத்து 14 ஆயிரம் ஆகும்.
மற்றொரு சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் கண்ணன்குடி பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஷேக்அப்துல்லா (39) என்பவர் 149 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து வேனையும், ரூ.96 ஆயிரம் மதிப்புள்ள 149 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விவசாய உர மூட்டைகளை ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.
- விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ரெயில் பாதையில் இருந்து சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் பெங்களூருக்கு செல்லக்கூடிய பயணிகளின் ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் 5 மணிநேரம் தாமதமாக சென்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விவசாய உர மூட்டைகளை ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.
அந்த ரெயில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக வந்து, தருமபுரி மாவட்டம், தொப்பூர், தருமபுரி, மாரண்டஅள்ளி வழியாக சென்று கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, ஓசூர் வழியாக வந்து பெங்களூருவை அடைவது வழக்கம்.
இந்த நிலையில் அந்த ரெயில் நள்ளிரவு 2 மணியளவில் மாரண்டஅள்ளி வழியாக ராயக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது ரெயிலின் சக்கரங்களில் தொடர்ச்சியாக தீப்பொறியுடன் புகை வெளியேறி கொண்டிருந்தது.
இதை கவனித்த ரெயில்வே ஊழியர் உடனடியாக ராயக்கோட்டை ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சரக்கு ரெயில் செல்வதற்கான சிக்னல்கள் ஆப் செய்து விட்டார்.
திடீரென்று ரெயில்வே பாதையில் சிக்னல்கள் கிடைக்காததால் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து உள்ளது என்று எண்ணி சரக்கு ரெயிலை என்ஜின் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தினார்.
அப்போதுதான் அந்த சரக்கு ரெயில் சக்கரத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறியதை கவனித்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சரக்கு ரெயிலின் சக்கரங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது 6 பெட்டிகள் ரெயில்வே பாதையில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊழியர்கள் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த சேலம் ரெயில்வே கோட்டம் மற்றும் பெங்களூரு ரெயில்வே கோட்டம் அதிகாரிகள், போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
அதிகாலையிலேயே 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்களை வரவழைத்து ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதையில் இருந்து 6 பெட்டிகளின் சக்கரங்கள் விலகியதற்கான காரணம் என்ன? என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்லக்கூடிய குர்லா எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-பெங்களூரு செல்லக்கூடிய பாசஞ்சர் ரெயில் ஆகிய 3 ரெயில்கள் தருமபுரி, மொரப்பூர் வழியாக ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை, என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது.
- நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்றது.
தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.
செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக களைகட்டி நடைபெற்று வருகிறது.
தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது.
கிடா ஆடு 12 முதல் 15 ஆயிரம் வரையிலும், பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும், ஆடுகளின் எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்பனை ஆகிறது.
இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஆறு ஆயிரம் முதல் எட்டாயிரம் வரையில் ஆடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சராசரியாக ரூபாய் 5 கோடி விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் இருந்தது
- நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த டி.கோட்டபள்ளி பகுதியைச் சோமசேகர்.
இவரது மகள் பவ்யாஸ்ரீ (வயது22). இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அங்குள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அனுமதியின்றி 2 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார் திருவண்ணாமலை சாலை பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அங்குள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி போலீசார் வழிமறித்தபோது திடீரென்று லாரியில் இருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் லாரியை சோதனை போலீசார் செய்தனர். அதில் அனுமதியின்றி 2 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அத்திபள்ளியைச் சேர்ந்த லாரி டிரைவர் விக்ணேஷ் வண்டியில் மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.
இதைத்ெதாடர்ந்து போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள டிப்பர் லாரி உரிமையாளர் அஜீத்குமார், டிரைவர் விக்ணேஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.






