என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் குட்கா ெபாருட்கள்.
குட்கா கடத்திய 2 டிரைவர்கள் கைது
- அந்த வழியாக வந்த ஒரு வேனை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
- தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மினி சரக்கு வேனை வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே டிரைவரை பிடித்து விசாரித்ததில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கம்மாள தெருவைச் சேர்ந்த குமார் (வயது53) என்பவர் பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரத்திற்கு குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது.
உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 778 கிலோ குட்கா பொருட்களையும், வேனையும் பறிமுதல் செய்தனர். கடத்தி கொண்டு வரப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.8 லட்சத்து 14 ஆயிரம் ஆகும்.
மற்றொரு சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் கண்ணன்குடி பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஷேக்அப்துல்லா (39) என்பவர் 149 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து வேனையும், ரூ.96 ஆயிரம் மதிப்புள்ள 149 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.