என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் கடத்திய  டிப்பர் லாரி பறிமுதல்
    X

    மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

    • போலீசார் அங்குள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அனுமதியின்றி 2 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார் திருவண்ணாமலை சாலை பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அங்குள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி போலீசார் வழிமறித்தபோது திடீரென்று லாரியில் இருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் லாரியை சோதனை போலீசார் செய்தனர். அதில் அனுமதியின்றி 2 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அத்திபள்ளியைச் சேர்ந்த லாரி டிரைவர் விக்ணேஷ் வண்டியில் மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.

    இதைத்ெதாடர்ந்து போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள டிப்பர் லாரி உரிமையாளர் அஜீத்குமார், டிரைவர் விக்ணேஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×