என் மலர்
கிருஷ்ணகிரி
- முகாமை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- பேரூராட்சி கவுன்சிலர் கேஎஸ்ஜி,கார்த்தி,மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் கூடுதல் ஆட்சியர் வசுந்த்ரா கார்க், மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜன், மாநில விவசாய அணி வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் சந்தோஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலாஜி, தாசில்தார் திலகம், வட்டார மருத்துவ அலுவலர் சிவகுமார் ,பேரூராட்சி கவுன்சிலர் கேஎஸ்ஜி,கார்த்தி,மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- முன்னாள் மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிக்கு உதவிடும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பான் இயந்திரம் வழங்கினர்.
- இவர்களில் ஒரு மாணவன் தற்போது சென்னை ஐஐடி யில் படித்து கொண்டு இருப்பது இப்பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை முடித்த முன்னாள் மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிக்கு உதவிடும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பான் இயந்திரம் வழங்கினர்.
இந்நிகழ்வில் பொறுப்பு தலைமை ஆசிரியர் மஞ்சுநாதன், உதவி ஆசிரியர் இராம்குமார், தற்காலிக ஆசிரியர் அனிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோகிலா, பாரதி ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கிய முன்னாள் மாணவர்களான விநோதினி, ரஞ்சிதா, பியங்கா, பாரதி, பிரே ம்குமார், கோகுல், விக்னேஷ், அருண்குமார், பாண்டியன், கார்த்தி, நவீன்குமார், ராமன், லட்சுமணன், பிரபு, சுரேந்தர் ஆகியோருக்கு பள்ளியின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் ஒரு மாணவன் தற்போது சென்னை IIT யில் படித்து கொண்டு இருப்பது இப்பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
- முகாமை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை பார்வையிட்டார்.
- கர்ப்பினி பெண்களுக்கு, ஊட்டசத்து பெட்டகம், பார்வை குறைபாடு உள்ள ஆண்களுக்கு மூக்கு கண்ணாடிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை பார்வையிட்டார்.
இதில், தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமசந்திரன் மற்றும் ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.ரமேஷ்குமார், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், தளி வட்டார மருத்துவ அலுவலர் நிர்மலா, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, அஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் உள்ளிட்ட சுற்றுபுற கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கர்ப்பினி பெண்களுக்கு, ஊட்டசத்து பெட்டகம், பார்வை குறைபாடு உள்ள ஆண்களுக்கு மூக்கு கண்ணாடிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்த மருந்துவ முகாமில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் பொது மருத்துவம், மகப்பேரு மருத்துவம், குழந்தைகளுக்கான சிகிச்சை, காது மூக்கு தொண்டை பிரிவு, கண்நோய் சிகிச்சை, பல்நோக்கு பிரிவு மருத்துவம், காசநோய், மன நல மருத்துவம் மற்றும் தொழுநோய் பிரிவுகளின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அஞ்செட்டி சுற்றுபுற கிராம மக்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
- பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
- பாலாபிஷேகம் மற்றும் புனிதநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப் பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சேலத்து மாரியம்மன் மற்றும் எல்லம்மா தேவி கோயிலில், ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக பிரதிஷ்டை விழா கடந்த 23-ம்தேதி துவங்கியது.
விழாவையொட்டி கோவிலில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் 'நடைபெற்று வருகிறது. நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் மேள தாளங்களுடன் அம்மனுக்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
அப்போது பெண்கள் அருள் வந்து ஆடினர். தொடர்ந்து தேன்கனிக்கோட்டை பெரிய ஏரிக்கு சென்ற பக்தர்கள், அங்கு நாகர் சுவா மிக்கு சிறப்பு வழிபாடுகள்செய்தனர்.
பின்னர் அங்கிருந்து புனித தண்ணீர் எடுத்துக்கொண்டு தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தனர்.
தொடர்ந்து கோயிலில் சேலத்து மாரியம்மன், எல்லம்மா தேவி சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் மற்றும் புனிதநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப் பட்டது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தேன்கனிக்கோட்டையில் உள்ள சேலத்து மாரியம்மன் மற்றும் எல்லம்மா தேவி கோவிலில் ராஜகோபுரம் மகாகும்பாபிஷேக பிரதிஷ்டை விழாவையொட்டி பெண்கள் தீர்த்த பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
- வெப்பாலம்பட்டி பகுதியில் 80-ற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
- மயானத்திற்கு இடம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி காலனி பகுதியில் 80-ற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்திற்கென தனியே மயானம் ஒதுக்கப்படாத நிலையில், காட்டாகரம்- சுண்டகாபட்டி ஏரி கால்வாய் அருகே சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு முறை கிராமத்தில் உயிரிழப்பு ஏற்படும்போதும் பிரச்சனை ஏற்படுவதும், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் உயிரிழந்தை நிலையில், அடக்கம் செய்ய இடம் இல்லாததால் போராட்டத்திற்கு கிராம மக்கள் தயாரான நிலையில் போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் பிரபாவதி நேரில் சென்று, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தற்போது ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய அறிவுறுத்தி, விரைவில் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர்.
இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், வெப்பாலம்பட்டி கிராமத்திலிருந்து சுடுகாட்டிற்கு பாதை கிடையாது. சுடுகாட்டில் புதைக்க இடம் கிடையாது. இருக்கின்ற குறைந்தபட்ச இடத்தில் அனைத்து உடல்களையும் அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டு கேட்டு போராடி வருகிறோம். காட்டாகரம்- சுண்டகாபட்டி ஏரி கால்வாய் அருகே 7 ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. அவற்றில் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
இது குறித்து வெப்பாலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் கேட்டபோது, ஓடை புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய உத்திரவு கொடுக்கப்பட்டுள்ளது. அளந்த காட்டிய பிறகு மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.
- 350 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் உபகரனங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.
- 70 பேருக்கு சேலை,வேஷ்டி மற்றும் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைமை சார்பாக நடிகர் மற்றும் அகில இந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தளபதி விஜய் 49-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி
நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மக்கள் மன்றம் தொண்டரணி தலைமை சார்பாக கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது. பாப்பாரப்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் பயிலும் 350 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் உபகரனங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பழைய பேட்டை சின்ன்ணன் தெரு பகுதியில் மக்கள் இயக்கம் சார்பாக கிளை மன்றம் திறந்து பொது மக்கள் 70 பேருக்கு சேலை,வேஷ்டி மற்றும் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் கேக் வெட்டி பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தொண்ட ரணி கிழக்கு மாவட்ட தலைவர் முரளி விஜய் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சத்யராஜ் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மணிகண்டன் மாவட்டத் துணைத் தலைவர் ஜெயசூர்யா கிருஷ்ணகிரி முன்னாள் நகரத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி நகரத் தொண்டரணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர் இர்பான், பொருளாளர் அருண்,துணை தலைவர் சுகந்த் துணை செயலாளர் கேசவன், மற்றும் நகர நிர்வாகிகள் ஜோசப், பிரதீப், தமிழ், கோபால், சிவா, நவீன், சூர்யா,மணிகண்டன், விமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
பர்கூரில் கொண்டாட்டடம்
இதேபோன்று நடிகர் விஜய் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு பர்கூர் ஒன்றிய தொண்டரணி தலைமை சார்பாக பர்கூர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பர்கூர் சுற்றியுள்ள கிளை மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தொண்டரணி பர்கூர் ஒன்றிய தலைவர் பசுவராஜ் மற்றும் செயலாளர் புஷ்பராஜ் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் முரளிவிஜய் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தொண்டரணி மாவட்ட செயலாளர் சத்யராஜ், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் சூர்யா, கிருஷ்ணகிரி முன்னாள் நகர தலைவர் ரமேஷ், பர்கூர் தொண்டரணி சபரி துரை, சிவப்பிரசாத் அஜய் விஷ்ணு அரவிந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
ஊத்தங்கரை
இதேபோன்று நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி சார்பாக மத்தியில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஊத்தங்கரை மற்றும் மத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த சுமார் 50 பச்சிளம் குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து குப்பநத்தம், எட்டுபட்டி மற்றும் வேலாவள்ளி ஆகிய கிராமங்களில் தளபதி பெயர் பலகை திறக்கப்பட்டது. குப்பநத்தம் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து கவுரவிக்க பட்டது. மேலும் எட்டுபட்டியில் உள்ள உயர் நிலைபள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் முரளி விஜய் தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சத்யராஜ், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் ஜெயசூர்யா, இணை செயலாளர் சுகுமார், பர்கூர் ஒன்றிய தொண்டரணி தலைவர் பசுவராஜ், செயலாளர் புஷ்பராஜ், மத்தூர் ஒன்றிய தலைவர் சந்தோஷ் குமார், ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், இணை செயலாளர் குமார், சாரதி, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் ரமேஷ், பொருளாளர் எழில், ஒன்றிய நிர்வாகி சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது.
ஓசூர், ஜூன்.24-
கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திகரை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ஜெய் தீபக்குமார்( வயது 19).
இவர் ஓசூரில் இருந்து பேரண்ட பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் பாரஸ்ட் ஏரியாவில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவர் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெய் தீபக்குமார் சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் சரயு தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
- கணிணி உள்ளீட்டுக்கு பின், இருப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட, ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட இருப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கிருஷ்ணகிரி தொகுதிக்கு கூடுதலாக, 1,000 கன்ட்ரோல் யூனிட் எந்திரங்கள் வந்தன. அவற்றை வைப்பதற்காக ஓட்டுப்பதிவு எந்திர அறை, மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் சரயு கூறியதாவத:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த, 2,117 'கன்ட்ரோல் யூனிட்', 3,606 'பேலட் யூனிட்', 2,606 'விவிபேட்' எந்திரங்களும் இருப்பில் உள்ளது. தற்போது கூடுதலாக, 1,000 புதிய கன்ட்ரோல் யூனிட் எந்திரங்கள் வந்துள்ளன. இவற்றை கணிணி உள்ளீட்டுக்கு பின், இருப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், தேர்தல் தனி தாசில்தார் ஜெயசங்கர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
- எலக்ட்ரானிக் கம்பெனி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நியூ டெம்பிள் லேண்ட் அட்கோ பகுதியை சேர்ந்த விஸ்வநாதா உடுப்பா மகன் ஸ்ரீஆதர்ஷ் (வயது 26).
இவர் உத்தனப்பள்ளியில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் கம்பெனி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒரு ஊழியரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய காதலை அவர் ஏற்றுக் கொள்ளாததால் மனமுடைந்த ஸ்ரீ ஆதர்ஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புளியங்கொட்டை, தானியங்களை விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார்.
- எதிரே வந்த கார் ஒன்று மகேந்திரன் மீது மோதியது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே நாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது65). இவர் புளியங்கொட்டை, தானியங்களை விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் காரப்பட்டு வெண்ணாம்பள்ளி அருகே திருப்பத்தூர்-சேலம் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் ஒன்று மகேந்திரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் உடனே அங்கு வந்து மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடிவருகின்றனர்.
- மனநலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
- கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி.
இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து சுப்புலட்சுமி குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த சுப்புலட்சுமி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிபட்டணம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- மதுவுக்கு அடிமையான தந்தை தலைமறைவாக இருப்பதாக அறிந்த போலீசார் அவரை தேடிவருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிராம பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தந்தை மதுவுக்கு அடிமையானார். இதன்காரணமாக அந்த சிறுமியை பாதுகாக்கா யாரும் இல்லாமல் தனிமை இருப்பதுபோல் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் அந்த சிறுமியின் தந்தையையும் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதில் 4 பேர் 17 வயது சிறுமியிடம் பாலியல் தொடர்பு கொண்டதாகவும் அதனால் அச்சிறுமி 4 மாத கர்ப்பம் ஆனதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த பாலியல் தொடர்பில் இருந்த தனது உடன்பிறந்த அண்ணன் மற்றும் பெரியப்பா மகன், உறவினர் சந்திரசேகரன் (42), தமிழ்வண்ணன் (29) ஆகிய 4 பேரும் சிறுமியை சீரழித்தது என தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியின் 2 அண்ணன்கள், சந்திரசேகரன், தமிழ்வண்ணன் ஆகிய 4பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் மதுவுக்கு அடிமையான தந்தை தலைமறைவாக இருப்பதாக அறிந்த போலீசார் அவரை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






