என் மலர்
நீங்கள் தேடியது "கன்ட்ரோல் யூனிட் எந்திரங்கள்"
- கலெக்டர் சரயு தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
- கணிணி உள்ளீட்டுக்கு பின், இருப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட, ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட இருப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கிருஷ்ணகிரி தொகுதிக்கு கூடுதலாக, 1,000 கன்ட்ரோல் யூனிட் எந்திரங்கள் வந்தன. அவற்றை வைப்பதற்காக ஓட்டுப்பதிவு எந்திர அறை, மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் சரயு கூறியதாவத:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த, 2,117 'கன்ட்ரோல் யூனிட்', 3,606 'பேலட் யூனிட்', 2,606 'விவிபேட்' எந்திரங்களும் இருப்பில் உள்ளது. தற்போது கூடுதலாக, 1,000 புதிய கன்ட்ரோல் யூனிட் எந்திரங்கள் வந்துள்ளன. இவற்றை கணிணி உள்ளீட்டுக்கு பின், இருப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், தேர்தல் தனி தாசில்தார் ஜெயசங்கர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.






