என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்து மூதாட்டியிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
    • எங்க பாட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முத்துராயன் ஜீ பியில் வசித்து வருபவர் மூதாட்டி வெங்கடலட்சுமம்மா (வயது 103), இவருடைய பிறந்தநாளை, குடும்பத்தினர் நேற்று கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர்.

    மூதாட்டி வெங்கடலட்சுமம்மாவுக்கு நேற்று 103-வது பிறந்த நாள் ஆகும். இவருக்கு 6 மகள்கள் உள்ள நிலையில், இவருடைய குடும்பத்தில், மொத்தம் 5 தலைமுறையாக உள்ள 217 பேர் நேற்று ஒரே இடத்தில் கூடி பிறந்தநாள் விழாவை பட்டாசு வெடித்துகொண்டாடியும், கேக் வெட்டி மூதாட்டிக்கு ஊட்டிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த மூதாட்டி வழியில் வந்தவர்கள், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இருந்தும் உறவினர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்து மூதாட்டியிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

    இதுகுறித்து அவரது பேரப்பிள்ளை கூறுகையில், நான் நான்காவது தலைமுறையாக உள்ளேன். எனது மகன் தற்போது 5-வது தலைமுறையாக உள்ளான். இன்று எங்க பாட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் நாங்களும் வாழ வேண்டும். எங்கள் பாட்டியும் இன்னும் நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ வேண்டும் என ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், எங்கள் பாட்டி இதுவரை மருத்துவமனைக்கு ஒருமுறை மட்டும் தான் சென்று வந்துள்ளார். அவருக்கு கண் காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் நன்றாக உள்ளது.

    அவரே தன்னுடைய அன்றாட வேலைகளை செய்து கொள்கிறார். அவர், கேழ்வரகு மற்றும் சோள களியை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார். ஒரு சில நேரங்களில் இட்லி, தோசை கொடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

    விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை சைவஉணவு பரிமாறப்பட்டது.

    • அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து மோதியது.
    • படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அகரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (32).

    கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று பேரிகை-சூளகிரி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி உடனே அங்கு சென்று பலியான முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
    • முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அரிமா சங்க பதவியேற்பு நிகழ்ச்சி போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் 2023-24-ம் ஆண்டிற்கான போச்சம்பள்ளி நகர அரிமா சங்கத் தலைவராக காமராஜர் அகாடமி நிறுவனர் கௌதமை அரிமா சங்கத்தின் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.

    மேலும் அரிமா சங்க செயலாளராக நிர்வாகம் பிரபு, சேவை செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் பாரதி குமரன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர் செல்வராஜ், முதலாம் துணை மாவட்ட ஆளுநர் செந்தில்குமார், லியோ ஒருங்கிணைப்பாளர் முரளி, மாவட்ட அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் போச்சம்பள்ளி நகர அரிமா சங்கத்தைச் சார்ந்த பட்டய தலைவர் தாமரை ச்செல்வன், வட்டாரத் தலைவர் ராஜா, திருநாவுக்கரசு, சுப்பிரமணி, ஜெயவேல், செந்தில், சரவணன், பழனி, பிள்ளையார், சிவராஜ், கணேசன், ராமன், செல்வம், போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சார்பாக சரவணன் சாந்த மூர்த்தி புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கொண்டனர்.போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

    • கூட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார்.
    • மாவட்ட பிரதிநிதி சுகுமார் வரவேற்புரை யாற்றினார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க மற்றும் கிருஷ்ணகிரி நகர தி.மு.க சார்பில் தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரிதா நவாப், நகர்மன்ற துணைத் தலைவரும், மாவட்ட துணை செயலா ளருமான சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர அவைத்தலைர் தர்மன், நகர துணைண செயலாளர்கள் பொன். குணசேகரன், அரங்கண்ணல், நகர பொருளாளர் கனல் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி ஜான்டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பிரதிநிதி சுகுமார் வரவேற்புரை யாற்றினார்.

    இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., தலைமைகழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.

    இதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் கோவிந்தன் மற்றும் முன்னாள், இன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளிக்கு சென்ற பாவண்ணன் அங்கு பூச்சி உருண்டையை திடீரென்று விழுங்கியதால் வாந்தி எடுத்துள்ளார்.
    • சிகிச்சை பெற்று வந்த பாவண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் பாவண்ணன் (வயது16). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே அரசம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 23-ந் தேதி அன்று பள்ளிக்கு சென்ற பாவண்ணன் அங்கு பூச்சி உருண்டையை திடீரென்று விழுங்கியதால் வாந்தி எடுத்துள்ளார்.

    உடனே அந்த மாணவனை ஆசிரியர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த பாவண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து பாவண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பரிசு தொகையை, அஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் வழங்கி பாராட்டினார்.
    • நீட் தேர்வில் 536 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் மாதவனுக்கு 5 ஆயிரம், 330 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவிற்கு 5 ஆயிரமும் வழங்கினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

    இப்பள்ளியில் பிளஸ்-2 மாணவன் மது 544 மதிப்பெண் பெற்று முதல் இடமும், மாணவி சோபா 537 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், 515 மதிப்பெண் பெற்ற யாக மணி இடமும் பெற்றுள்ளனர். அதேபோல், 10-ம் வகுப்பில் 465 மதிப்பெண்கள் பெற்று தீபக் குமார் முதல் இடமும், நவீன் குமார் 437 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும்,

    ராகுல் 435 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பரிசு தொகையை, அஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் வழங்கி பாராட்டினார்.

    அதே போல், நீட் தேர்வில் 536 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் மாதவனுக்கு 5 ஆயிரம், 330 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவிற்கு 5 ஆயிரமும் வழங்கினார்.

    விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மூர்த்தி வரவேற்றார். காதர்பாஷா, ரங்கசாமிகார்த்திக் பாபு, சிவகாமி, சண்முகம், வெங்கடராஜ், பெருமாள், அன்பரசன், பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் முனிராஜ், ஆசிரியர் பயிற்றுனர் நேரு, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • எதிரே வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி பெரியபுளியரசி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது55). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தபா அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருபரபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று ஓசூர் அருகே மத்திகிரி பெளகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஆனந்த் (20). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆனந்த் தன்னுடன் வேலைபார்க்கும் நண்பர் வினய்குமாருடன் (22) மோட்டார் சைக்கிளில் பெளகொண்டப்பள்ளிக்கு வந்தனர். அப்போது ஓசூர்-தளி சாலையில் திடீரென்று வண்டி கட்டுபாட்டை இழந்து 2பேரும் வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

    அப்போது அந்த வழியாக டிப்பர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் ஆனந்த் மற்றும் வினய்குமார் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனந்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வினய்குமாரை மேல்சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் ஆனேக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திர மாநில போலீசார் புளியாண்டபட்டி கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரமேஷ் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை அழைத்துச் சென்றனர்.
    • சித்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புளியாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் உள்ள 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள புளியாண்டபட்டி கிரா மத்தில் குறவன் இனத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் அய்யப்பன் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தாகவும் இது குறித்து ஆந்திர மாநில போலீசார் அய்யப்பன், அவரது தாயார் உட்பட 4 பேரை கடந்த 11-ந் தேதி சித்தூர் போலீசார் விசா ரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

    இந்நிலையில் அய்யப்பனின் சகோதரி ஆன்லைனில் புகார் மனு அளித்துள்ளார்.

    இதனால் ஆந்திர மாநில போலீசார் கடந்த 12-ந் தேதி இரவு 15-க்கும் மேற்பட்ட போலீசார் புளியாண்டபட்டி கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரமேஷ் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை அழைத்துச் சென்றனர்.

    இவர்களை ஆந்திரா போலீசார் சித்ரவதை செய்து 2 பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சியினர் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களை மீட்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எல்.சுதாகர் லூசூரி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், இந்த விசாரணை குழுவினர் நேற்று முன்னதாக போச்சம் பள்ளி வட்டா ட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் ஆய்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, பின்னர் புளியாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் உள்ள 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    இதில் விசாரணை செய்யப்பட்டவைகளை வீடியோ பதிவு செய்து கொண்டனர். புளியாண்டபட்டி கிராமத்தில் ஆந்திர போலீசார் திடீரென விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இளவரசிக்கு வலிப்பு நோயால் இருப்பதால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • நேற்று முன்தினம் அவருக்கு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்தார்.

     கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி பெரியபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி இளவரசி (வயது19).

    இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இளவரசிக்கு வலிப்பு நோயால் இருப்பதால், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குருபரபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி ஒரு வருடம் ஆனநிலையில் இளம்பெண் இறந்த சம்பவம் குறித்து பெண்ணின் கணவர் சஞ்சய் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. தமிழரசு விசாரணை நடத்தி வருகிறார்.

    • மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று இருக்க வேண்டும்.
    • தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறுதானிய உணவகம் அமைத்திட வருகிற 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாட்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்க கூடிய சிறுதானியங்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

    தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உரிய நிபந்தனைகளுடன் விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.

    சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் ஆகியவற்றிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று இருக்க வேண்டும். தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு "ஏ" அல்லது "பி" சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

    மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியளர் குழு, கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    எனவே, ஆர்வமுடையவர்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), அறை எண்.106, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 27ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    • தற்போது கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில், 50.50 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு 224 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

     கிருஷ்ணகிரி,

    கர்நாடகா மாநிலம் நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் வழியாக கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆறு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு முதலில் வந்து, பின்னர் கிருஷ்ணகிரி அணை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்கிறது.

    மாவட்டத்தின் முக்கிய ஆறானா இந்த ஆற்று நிரை நம்பி பல ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் கெலவரப்பள்ளி அணையின், அணையின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பீட்டில் உபரிநீர் வழந்தோடி கதவுகள், மணல் போக்கி கதவி, கால்வாய் தகவுகள் ஆகியவற்றினை மாற்றி அமைக்கும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த பணிகளை மேற்கொள்ள முதலில் அணையில் உள்ள தண்ணீரை 24 அடியாக குறைப்பதற்கான பணி மற்றும் புனரமைக்கும் பணி நேற்று துவங்கியது. அதன்படி, தற்போது அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ள 41 அடிய தண்ணீரை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, நேற்று கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

    இது குறித்து கலெக்டர் கூறுகையில், கெலவரப்பள்ளி அணையில், அணை பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பீட்டில் உபரிநீர் வழிந்தோடி கதவுகள், மணல் போக்கி கதவு, கால்வாய் கதவுகள் ஆகியவற்றினை மாற்றி அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த பணிகள் மேற்கொள்ள அணையில் உள்ள நீர்மட்டத்தை 24 அடியாக குறைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து தண்ணீரை உபரிநீர் வழங்கிதோடி கதவுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் 24 அடியாக குறைந்த பின், அணையின் உபரிநீர் மதகுகளின் எண்ணிக்கை 7, மணல் போக்கி கதவு ஒன்று மற்றும் இடதுபுற கால்வாய் கதவுகள் 2 ஆகிய பணிகள் ரூ.26 கோடியில் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்படும். அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயரும். தற்போது கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில், 50.50 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு 224 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அதே அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. தற்போது கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அவ்வாறு அதிகரிக்கும் நிலையில், கிருஷ்ணகிரி அணையில் இருந்தும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் ராதிகா, சிவசங்கரி, பொன்னிவளவன், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, கெலவரப்பள்ளி அணை பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர் பணியே அறப்பணி” அவற்றை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
    • ஒரு மாணவர் மற்றும் பேராசிரியரின் வெற்றிக்கு இது மிகவும் முக்கியமானது என்று கூறி தனது தலைமையுரையை ஆற்றினார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் சீனிவாசா நகரில் அமைந்திருக்கும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22.6.2023 முதல் 23.6.2023 வரை இரண்டு நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் தொடக்க மாக அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சீனி. திருமால்முருகன் ஆசிரியர் பணியே அறப்பணி" அவற்றை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், பேராசியர்களாகிய உங்க ளுக்கும் மாணவிகளுக்கும் இடையே வலுவான தொடர்பு இருக்க வேண்டும்.

    ஒரு மாணவர் மற்றும் பேராசிரியரின் வெற்றிக்கு இது மிகவும் முக்கியமானது என்று கூறி தனது தலைமையுரையை ஆற்றினார்.

    அதியமான் கல்வி நிறுவங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன் ஒரு பேராசிரியர் மாணவர் களை அதிகமாக பேச ஊக்குவிக்க வேண்டும், தற்போதைய நிகழ்வுகளை அறிய செய்ய வேண்டும். இது மாணவிகளின் சிந்தனை செயல்முறையை புரிந்து கொள்ளவும் மேம்படுத்தவும் உதவும் என்று கூறி வாழ்த்துரை வழங்கினார்.

    தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கார்ப்பரேட் சாஃப்ட் ஸ்கில்ஸ் குரல் மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர் ஆஷாமால்வே கலந்து கொண்டார்.

    இரண்டாம் நாள் 23.06.2023 பயிற்சி வகுப்பில் நேர மேலாண்மையை பேராசிரி யர்கள் எவ்வாறு கையா ள்வது என்பதற்கும் விளையா ட்டுக்கள் வழியாகவும் பாடத்திட்டத்தை மாணவி களுக்கு உற்சாகத்துடன் கற்பிப்பது குறித்து பல்வேறு திறன்சார் பயிற்சிகளை வழங்கினார்.

    மேலும் மாணவிகளின் பிரச்சனைகளை எளிய முறையில் தீர்வு காண்பது ,விவாத பங்கேற்பு, கற்றல் முறைகள், பேராசிரியர்கள் எப்போதும் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்றும் குழுவாக செயல்படுவதன் மூலம் வெற்றியடையலாம் என்றும் தனது கருத்தை முன்வைத்து உரையாற்றினார்.

    ×