என் மலர்
உள்ளூர் செய்திகள்

விசாரணைக்காக அழைத்து சென்றவர்களிடம் ஆந்திர போலீசார் பாலியல்தொல்லை:சித்தூர் கூடுதல் எஸ்.பி. பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேரில் விசாரணை
- ஆந்திர மாநில போலீசார் புளியாண்டபட்டி கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரமேஷ் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை அழைத்துச் சென்றனர்.
- சித்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புளியாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் உள்ள 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள புளியாண்டபட்டி கிரா மத்தில் குறவன் இனத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் அய்யப்பன் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தாகவும் இது குறித்து ஆந்திர மாநில போலீசார் அய்யப்பன், அவரது தாயார் உட்பட 4 பேரை கடந்த 11-ந் தேதி சித்தூர் போலீசார் விசா ரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அய்யப்பனின் சகோதரி ஆன்லைனில் புகார் மனு அளித்துள்ளார்.
இதனால் ஆந்திர மாநில போலீசார் கடந்த 12-ந் தேதி இரவு 15-க்கும் மேற்பட்ட போலீசார் புளியாண்டபட்டி கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரமேஷ் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை அழைத்துச் சென்றனர்.
இவர்களை ஆந்திரா போலீசார் சித்ரவதை செய்து 2 பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சியினர் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களை மீட்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எல்.சுதாகர் லூசூரி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விசாரணை குழுவினர் நேற்று முன்னதாக போச்சம் பள்ளி வட்டா ட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் ஆய்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, பின்னர் புளியாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் உள்ள 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதில் விசாரணை செய்யப்பட்டவைகளை வீடியோ பதிவு செய்து கொண்டனர். புளியாண்டபட்டி கிராமத்தில் ஆந்திர போலீசார் திடீரென விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






