கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் ஊழியர் உள்பட 2 பேர் பலி

எதிரே வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் ஊழியர் உள்பட 2 பேர் பலி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி பெரியபுளியரசி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது55). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தபா அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருபரபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று ஓசூர் அருகே மத்திகிரி பெளகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஆனந்த் (20). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆனந்த் தன்னுடன் வேலைபார்க்கும் நண்பர் வினய்குமாருடன் (22) மோட்டார் சைக்கிளில் பெளகொண்டப்பள்ளிக்கு வந்தனர். அப்போது ஓசூர்-தளி சாலையில் திடீரென்று வண்டி கட்டுபாட்டை இழந்து 2பேரும் வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

அப்போது அந்த வழியாக டிப்பர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் ஆனந்த் மற்றும் வினய்குமார் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனந்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வினய்குமாரை மேல்சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் ஆனேக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com