என் மலர்
கிருஷ்ணகிரி
- தமிழகத்திலேயே முதல் முதலாக 4,200 ஆண்டுகளுக்கு முந்தைய உழவுக்கு இரும்பை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
- அந்த கால மக்கள் இது மாதிரியான கற்கள் தொலைவில் இருந்து பார்க்கும் போதே தெரியும் வகையில்தான், அந்த கற்களை நிறுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஐகுந்தம் அருகே மயிலாடும்பாறை உள்ளது. இங்கு தொல்லியல் ஆய்வில், தமிழகத்திலேயே முதல் முதலாக 4,200 ஆண்டுகளுக்கு முந்தைய உழவுக்கு இரும்பை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மயிலாடும்பாறையை சுற்றிலும் பல்வேறு தொல்லியல் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் ஐகுந்தம் பகுதியை சேர்ந்த சதாம் மற்றும் அண்ணாச்சி ஆகியோர், மலை மீது ஒரு கல் வித்யாசமாக இருப்பதாக கூறியதன் அடிப்படையில், அந்த இடத்தினை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் மாவட்ட அரசு அருங்காட்சியகமும் இணைந்து ஆய்வை மேற்கொண்டனர். இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
கிராமத்தில் இருந்து பார்க்கும் போதே மலைமீது ஒரு கல் வித்தியாசமாக தெரிந்தது.
மஜித்கொல்லஅள்ளி மலைமீது சென்றபோது தான், அது பெருங்க ற்காலத்துக்கு முன்னர் நினைவுச்சின்னங்களில் ஒன்றான தூக்கிவச்சான் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மயிலாடும்பாறை மலையடிவாரத்தில் பெருங்கற்கால கற்திட்டைகள் மற்றும் வெண்சாந்து ஓவியங்கள் காணப்படுகின்றது.
அந்த பகுதியிலேயே புதியகற்காலத்தைச் சேர்ந்த செங்காவி ஓவியங்களும் உள்ளன. பெருங்கற்படைக் காலத்தில் ஓரளவு ஒழுங்குபடுத்தப்பட்ட, துளையிடப்பட்ட, கற்பதுகைகள் அமைத்தவர்கள், அதற்கு முன்னர் புதியகற்காலத்திற்கும், பெருங்கற் படைகாலத்துக்கும் இடையில் இருந்தவர்கள்.
இருக்கும் கல்லை அப்படியே சிறுகற்கள் மீது நிறுத்தி இருக்கிறார்கள். அது இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.
இங்குள்ள கல் 7 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்டதாகவும், அடியில் மூன்று கற்கள் கொண்டு நிறுத்தப்பட்டும் இருக்கிறது.
அந்த கால மக்கள் இது மாதிரியான கற்கள் தொலைவில் இருந்து பார்க்கும் போதே தெரியும் வகையில்தான், அந்த கற்களை நிறுத்தினார்கள்.
இது இப்பகுதியில் கண்டறியப்பட்ட மூன்றாவது தூக்கிவச்சான் கல் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த பகுதியை ஆய்வு செய்தால், பல தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வரலாற்றுக் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சதாம், அண்ணாச்சி ஆகியோர் உடன் இருந்தனர்.
- குழந்தைகள், விஷக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைக்குத் தினமும் ஏராளமான நோயாளிகள் கிராமப் பகுதியிலிருந்து வந்து செல்கின்றனர்.
- போதிய பராமரிப்பு இல்லாததால், வளாகத்தில் செடிகள் வளர்ந்து விஷ ஜந்துகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அதிக அளவில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், இங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், மருத்து வமனையில் பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாதபடி எப்போதும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாமல் மருத்துவமனை வளாகத்தில் கொட்டி வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலை நிலவி வருகிறது.
கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, கொசுக்கடிக்கு இடையில் நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்லும் நிலையுள்ளது.
சுகாதார நிலைய வளாகத்தின் திறந்தவெளி பகுதிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர் காடுபோல மாறியுள்ளது.
இதனால், விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளது. இக்குறைகளைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பொது மக்கள் கூறுகையில் மாநில எல்லையில் உள்ள பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அதிக அளவில் கர்ப்பி ணிகள், குழந்தைகள், விஷக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைக்குத் தினமும் ஏராளமான நோயாளிகள் கிராமப் பகுதியிலிருந்து வந்து செல்கின்றனர்.
ஆனால், இங்கு போதிய பராமரிப்பு இல்லாததால், வளாகத்தில் செடிகள் வளர்ந்து விஷ ஜந்துகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.
மருத்துவக் கழிவுகளைச் சுகாதார நிலைய வளா கத்தில் கொட்டுவதால், சிகிச்சைக்கு வரும் நோயாளி களுக்குத் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பவும், சுகாதார நிலைய வளாகத்தில் சுகாதாரத்தைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
- குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது.
- 10 பயனாளிகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் 10 பயனாளிகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.
இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 23 பேர் தங்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இந்த கூட்டத்தில் துணை இயக்குனர் ஆர்.பி.வேலு, பிரிகேடியர் ரவி முனிசாமி, நல அமைப்பாளர் ரமேஷ்குமார் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.
- ஜூஜூவாடியில் உள்ள மயானம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் காரை வழிமறித்தனர்.
- கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சிவராம் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் சிவராம் (வயது51) விவசாயி. மேலும் இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் சிவராம் இன்று காலை, அந்த பகுதியில், பசுமாடுகள் தீவனத்திற்காக புற்களை அறுத்து காரில் ஏற்றி வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது வரும் வழியில் ஜூஜூவாடியில் உள்ள மயானம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் காரை வழிமறித்தனர்.
பின்னர் கண்ணில் மிளகாய் பொடி தூவி அவரை வெளியே இழுத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஒசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் சிவராமை நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சிவராம் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, தப்பி சென்ற குற்றவாளிகள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- பள்ளிக்கு 400 மீட்டர் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்.
- பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் பச்சிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 380 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளி மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால், பெஞ்ச், டெஸ்க் வழங்குமாறு கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் பள்ளி சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், பெஞ்ச் மற்றும் டெஸ்குகள் பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கண்ணியப்பன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்அசோக் ஆண்டர்சன் வரவேற்றார். மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோக்காடி ராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பெஞ்ச், டெஸ்குகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தொடர்ந்து தலைமை ஆசிரியர் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், பள்ளியின் பின்புறம் காடு உள்ளது.
பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் அடிக்கடி பாம்புகள் பள்ளிக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே பள்ளிக்கு 400 மீட்டர் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
பள்ளிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். சமையல் செய்ய பாத்திரங்களை வழங்க வேண்டும். செப்டிக் டேங்க் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தன.
விரைவில் இந்த கோரிக்கை களை நிறை வேற்றி தருவதாக அசோக்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் ஜெயராமன், மகேந்திரன், சோக்காடி ஊராட்சி மன்ற தலைவர் கொடிலா ராமலிங்கம், துணைத் தலைவர்கள் ராஜசேகர், நாராயணகுமார், வங்கித் தலைவர் சூர்யா, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.
- வாக்குச்சீட்டு, விரல்களில் மையிடுதல் என தேர்தல் ஆணையத்தின் விதிமுறை களை பின்பற்றி தேர்தல் நடத்தப்பட்டது.
- தேர்தல் முடிந்த பின், வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.) நவீன தொழில்நுட்பத்துடன் மாணவர் பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை பள்ளியின் தாளாளர் கூத்தரசன் தொடங்கி வைத்தார்.
இந்த தேர்தல் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளியின் முதல்வரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி 12 பொறுப்புகளுக்கு 54 மாணவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் மாணவர்கள் தங்களது சின்னத்தை வடிவமைத்து, பள்ளி முதல்வரிடம் ஒப்புதல் பெற்ற நிலையில், மாணவர்கள் பிரச்சாரத்தை தொடங்கினர்.
இதில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் போட்டியிட்ட நிலையில், ஆர்வமுடன் வாக்குகளை சேகரித்தனர். தேர்தல் முற்றிலும் மின்னணு தொழில்நுட்ப முறையில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குச்சீட்டு, விரல்களில் மையிடுதல் என தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் முடிந்த பின், வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளியின் கேப்டனாக மோனிஷ், துணை கேப்டனாக நக்ஷதிரா, விளையாட்டு பிரிவு கேப்டனாக அலிஷாசப்ஹத், துணை கேப்டனாக கிருபாஜெயதீப், ஆனந்த ஹவுஸ் கேப்டனாக ஜெயபிரியா, துணை கேப்டனாக லக்ஷனா, தீரஜ் ஹவுஸ் கேப்டனாக சந்தோஷ்பாபு, துணை கேப்டனாக கனிமொழி, பிரேம் ஹவுஸ் கேப்டனாக நவிகா, துணை கேப்டனாக ஸ்டீபன்ஜெபராஜ், சாந்தி ஹவுஸ் கேப்டனாக தேன்மொழி, துணை கேப்டனாக ஜனனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் மஞ்சுளா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது என்ஜினீயர் சரவணன், ரகுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- 13 கிலோ கொண்ட இரும்பு பைப்புகளை ஒருவர் திருடினார்.
- அங்கு வந்த லட்சுமிநாராயணன் உடனே அவரை பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள உப்பானூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது31). இவர் பில்டிங் கான்டிராட் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அச்சடெ்டி பகுதியில் ஜொல பெண்டா ரோடு சாலையில் கட்டிட வேலை நடந்து வருகிறது. அப்போது அந்த கட்டிடத்தில் 13 கிலோ கொண்ட இரும்பு பைப்புகளை ஒருவர் திருடினார்.
அப்போது அங்கு வந்த லட்சுமிநாராயணன் உடனே அவரை பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இரும்பு பைப்புகளை திருடிய நபர் பழைய மத்திகிரியை சேர்ந்த சோமசேகர் (23) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
- வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே சாந்தாபுரம் பூமாலை நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது43). கூலி தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓசூரில் 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட வுள்ளது.
- இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஓசூரில் 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மஞ்சம்மா, மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இருசக்கர வாகனத்தில் வந்த ஓசூர் பேடரஅள்ளி கங்கா நகரை சேர்ந்த பவித்ரகுமார் (42) என்பவர் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
- கையிலை மற்றும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 750 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஓசூர் பேடரஅள்ளி கங்கா நகரை சேர்ந்த பவித்ரகுமார் (42) என்பவர் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து புகையிலை பொருட்கள் கடத்திய பவித்ரகுமாரை கைது செய்தனர். புகையிலை மற்றும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 750 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
- அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் காரை வழி மறித்து செந்தில்குமாரிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.
- போலீசார் அந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி கேசவன் (20), அன்பழகன் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
தேனி மாவட்டம், உத்தனபாளையம் அடுத்துள்ள அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது49). இவர் நேற்று காரில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மேலுமலை பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் காரை வழி மறித்து செந்தில்குமாரிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். இது குறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சூளகிரியை சேர்ந்த கேசவன் (20), ஆவல்நத்தம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
- பெத்தஎலசகிரி ஏரியில் சந்தோஸ்குமார் குளித்து கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் அடுத்துள்ள கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஸ்குமார் (வயது37). பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் நேற்று பெத்தஎலசகிரி ஏரியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






