என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரை வழிமறித்து தனியார் நிறுவன  ஊழியரை மிரட்டிய 2 பேர் கைது
    X

    காரை வழிமறித்து தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய 2 பேர் கைது

    • அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் காரை வழி மறித்து செந்தில்குமாரிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.
    • போலீசார் அந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி கேசவன் (20), அன்பழகன் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தேனி மாவட்டம், உத்தனபாளையம் அடுத்துள்ள அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது49). இவர் நேற்று காரில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மேலுமலை பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் காரை வழி மறித்து செந்தில்குமாரிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். இது குறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சூளகிரியை சேர்ந்த கேசவன் (20), ஆவல்நத்தம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×