கிருஷ்ணகிரியில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது.10 பயனாளிகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது.

இதில் 10 பயனாளிகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.

இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 23 பேர் தங்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் துணை இயக்குனர் ஆர்.பி.வேலு, பிரிகேடியர் ரவி முனிசாமி, நல அமைப்பாளர் ரமேஷ்குமார் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com