என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் பேரவை தேர்தல்"

    • வாக்குச்சீட்டு, விரல்களில் மையிடுதல் என தேர்தல் ஆணையத்தின் விதிமுறை களை பின்பற்றி தேர்தல் நடத்தப்பட்டது.
    • தேர்தல் முடிந்த பின், வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.) நவீன தொழில்நுட்பத்துடன் மாணவர் பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை பள்ளியின் தாளாளர் கூத்தரசன் தொடங்கி வைத்தார்.

    இந்த தேர்தல் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளியின் முதல்வரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி 12 பொறுப்புகளுக்கு 54 மாணவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் மாணவர்கள் தங்களது சின்னத்தை வடிவமைத்து, பள்ளி முதல்வரிடம் ஒப்புதல் பெற்ற நிலையில், மாணவர்கள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

    இதில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் போட்டியிட்ட நிலையில், ஆர்வமுடன் வாக்குகளை சேகரித்தனர். தேர்தல் முற்றிலும் மின்னணு தொழில்நுட்ப முறையில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்குச்சீட்டு, விரல்களில் மையிடுதல் என தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்பட்டது.

    தேர்தல் முடிந்த பின், வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளியின் கேப்டனாக மோனிஷ், துணை கேப்டனாக நக்ஷதிரா, விளையாட்டு பிரிவு கேப்டனாக அலிஷாசப்ஹத், துணை கேப்டனாக கிருபாஜெயதீப், ஆனந்த ஹவுஸ் கேப்டனாக ஜெயபிரியா, துணை கேப்டனாக லக்ஷனா, தீரஜ் ஹவுஸ் கேப்டனாக சந்தோஷ்பாபு, துணை கேப்டனாக கனிமொழி, பிரேம் ஹவுஸ் கேப்டனாக நவிகா, துணை கேப்டனாக ஸ்டீபன்ஜெபராஜ், சாந்தி ஹவுஸ் கேப்டனாக தேன்மொழி, துணை கேப்டனாக ஜனனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் மஞ்சுளா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது என்ஜினீயர் சரவணன், ரகுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×