என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருசக்கர வாகனத்தில்  புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
    X

    இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

    • இருசக்கர வாகனத்தில் வந்த ஓசூர் பேடரஅள்ளி கங்கா நகரை சேர்ந்த பவித்ரகுமார் (42) என்பவர் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • கையிலை மற்றும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 750 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஓசூர் பேடரஅள்ளி கங்கா நகரை சேர்ந்த பவித்ரகுமார் (42) என்பவர் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து புகையிலை பொருட்கள் கடத்திய பவித்ரகுமாரை கைது செய்தனர். புகையிலை மற்றும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 750 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×