என் மலர்
கிருஷ்ணகிரி
- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 2, தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தனி தாசில்தார் ஜெகதீஸ்குமார், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை 7, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் (நிலம் எடுப்பு) சக்திவேல், சூளகிரி தாசில்தாராகவும், ஓசூர் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) அலகு 1 மோகன் அஞ்செட்டி தாசில்தாராகவும், அஞ்செட்டி தாசில்தார் அனிதா, போச்சம்பள்ளி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, தேசியநெஞ்சாலை 7, 46, தனி மாவட்ட வருவாய் அலுவலரின் (நிலம் எடுப்பு) நேர்முக உதவியாளராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மொழி, ஓசூர் தேசியநெடுஞ்சாலை, 844 அலகு 1 தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு), சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 7, தனி தாசில்தார் ஜெகதீஸ்குமார், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நீதியியல் பயிற்சி முடித்து வரும் பெரியண்ணன், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2 தனி தாசில்தாராகவும், நீதியியல் பயிற்சி முடித்து வரும், சக்தி, நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3, தனி தாசில்தாராகவும், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 844, அலகு 1 தனி தாசில்தார் காமாட்சி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 2, தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 1 தனி தாசில்தார் சிதம்பரம், ஓசூர் கோட்ட ஆய அலுவலராகவும், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 2, தனி தாசில்தார் வேலு, ஓசூர் தனி தாசில்தாராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), சூளகிரி சிப்காட் நிலை 4, அலகு 1 தனி தாசில்தார் ராஜலட்சுமி, சிறப்பு திட்ட செயலாக்க தனி தாசில்தாராகவும், நாகமங்கலம் சிப்காட் நிலை 5, அலகு 3 தனி தாசில்தார் மோகன், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 948 ஏ, அலகு 1, தனி தாசில்தாராகவும் (நிலம் எடுப்பு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு பிறப்பித்துள்ளார்.
- காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை கட்டினார்.
- கே.ஆர்.பி. அணை கட்டுமான பணி நடந்த போது இந்த காரில் வந்து தான் காமராஜர் அணையை பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி,
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. காமராஜர் பயன்படுத்தி வந்த செவர்லெட் கார், சென்னை காமராஜர் அரங்கில் இருந்தது. அந்த கார் கடந்த மாதம் 1-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து அந்த காருக்கான உதிரிபாகங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கார் புதுப்பிக்கப்பட்டது அந்த காரை கிருஷ்ணகிரியில் இருந்து காமராஜரின் சொந்த ஊரான விருதுநகருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதற்காக காமராஜர் பயன்படுத்திய கார் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அணை முன்பாக நிறுத்தப்பட்ட காரை செல்லகுமார் எம்.பி. கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இந்த கார் லாரி மூலமாக தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக விருதுநகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது குறித்து செல்லகுமார் எம்.பி. கூறுகையில், காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை கட்டினார்.
அவர் கே.ஆர்.பி. அணை கட்டுமான பணி நடந்த போது இந்த காரில் வந்து தான் காமராஜர் அணையை பார்வையிட்டார். அதை நினைவு கூறும் வகையில், காரை இங்கே கொண்டு வந்து, இங்கிருந்து வழி அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி அண்டு சில்க்ஸ் உரிமையாளர் எம்.பி. ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசுதுரை, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாநில பொதுச் செயலாளர் அக.கிருஷ்ணமூர்த்தி, முபாரக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தற்போது தக்காளியின் உற்பத்தி குறைந்து விலையேற்றம் அதிகரித்துள்ளது.
- உழவர் சந்தைகளில் தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
தோட்டக் கலைத்துறையின் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. பொதுவாக தக்காளி மட்டுமல்லாது அனைத்து காய்கறிகளும் வரத்து மற்றும் வினியோகம் வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,200 மெட்ரிக் டன் அளவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களில் தக்காளி வரத்து குறைந்து 250 மெட்ரிக் டன் அளவே உற்பத்தி ஆகிறது. மேலும், தற்போது ராயக்கோட்டை தக்காளி சந்தையில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 50 மெட்ரிக் டன் தக்காளி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
பொதுவாக பருவம் தவறிய மழைப் பொழிவினாலும், கடந்த 2-3 மாதங்களாக தக்காளியின் விலை குறைந்ததின் காரணமாக விவசாயிகள் புதிய தக்காளி நடவு செய்யாமையினாலும், தற்போது தக்காளியின் உற்பத்தி குறைந்து விலையேற்றம் அதிகரித்துள்ளது.
தற்போது தக்காளியின் விலையேற்றத்தை குறைக்கும் விதமாக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் ஆகியோரின் ஆணைப்படி, மாவட்டங்களில் உள்ள உழவர் சந்தைகளில் விலை கட்டுப்படுத்தப்பட்டு தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாக தோட்டக்கலை துறையின் நடவடிக்கையின் மூலமாக தக்காளி விற்பனை விலை வெளிசந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தைகளில் தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தோட்டக்கலை துறையின் மூலம் தக்காளி நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தக்காளியின் உற்பத்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தோட்டக்கலை துறையின் மூலம் இங்குள்ள விவசாயிகளிடம் தக்காளி நேரடியாக கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதன் மூலம் தக்காளியின் விலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. தோட்டக்கலை துறையின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் தக்காளியை பொதுமக்கள் பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட தலைவர் அறிவரசன் தொடக்க உரையாற்றினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் நேற்று நடந்தது.
வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிமுத்து. ராஜேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மாணிக்கம், துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் அறிவரசன் தொடக்க உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் திராவிடமணி, தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, நிர்வாகிகள் கிருஷ்ணன், சிவராஜ், ராஜேந்திரபாபு, மாரப்பன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊத்தங்கரை ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சரவணன் கூறினார்.
- அங்கு ஸ்கூட்டரில், 2 பேர் பிளாஸ்டிக் சாக்குபைகள் மற்றும் மின்னணு தராசுடன் வந்தனர்.
- கிருஷ்ணகிரியில் வீடு வீடாக ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் இளங்கோ தலைமையில், பறக்கும்படை வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், குடிமைப்பொருள் வருவாய் ஆய்வாளர் சத்தீஸ்குமார் ஆகியோர், நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை, 5-வது வார்டுக்குட்பட்ட முனுசாமி தெரு, குடிநீர் தொட்டி அருகில் 50 கிலோ அளவில், 19 மூட்டைகளில், 950 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்ட அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகில், 50 கிலோ அளவிலான, 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அப்போது அங்கு ஸ்கூட்டரில், 2 பேர் பிளாஸ்டிக் சாக்குபைகள் மற்றும் மின்னணு தராசுடன் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிபட்டி ராஜா (40), வெங்கடேசன் (27) என்பதும், கிருஷ்ணகிரியில் வீடு வீடாக ரேஷன் அரிசி வாங்கி, கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 2,050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஸ்கூட்டரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து, உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமையன்று இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட சமூக நலத்துறை சார்பாக இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. இந்த முகாமினை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து, 6 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான வைப்புத்தொகை ரசீதுகள் மற்றும் முதிர்வுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்து, உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது.
மேலும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமையன்று இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
முதல்-அமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 624 பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். மேலும், ஏப்ரல் 2023 முதல் தற்போது வரை 154 பெண்குழந்தை களுக்கு இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தி ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.
வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கப்படும். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் சுமார் 800 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று, உயர்கல்வி படித்து வருகின்றனர்.
இந்த மாவட்டத்தில் சமூகநல அலுவலக களப்பணி யாளர்கள் மூலம் இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொண்டு,
புதிய பயனாளிகளை கண்டறியவும், இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிடவும், இத்திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
எனவே, பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தை களை நன்றாக படிக்க வைக்க வேண்டும். இளம் வயது திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 15 ஆண்டுகளாக தினமும் ஒரு வாகன ஓட்டியாவது சாலையில் கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருவதே தொடர்கதையாகி வருகிறது.
- இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் ெதரி வித்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நாச்சிக்குப்பம் ஊராட்சி உட்பட்ட கத்திரிப்பள்ளி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் நெடுசாலை கிராமம் வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்த 3 கிலோ மீட்டர் சாலையில் கத்திரிப்பள்ளி, புரம், விருப்பசந்திரம், நெடுசாலை பாட்டூர், கலைஞர் நகர் ஆகிய கிராமங்கள் உள்ளது.
மேலும் இந்த சாலை அமைக்கப்பட்ட சில வருடங்களிலேயே சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி உள்ள நிலையில்பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் சாலை உரிய பராமரிப்பு இல்லாத தால் நாளடைவில் சாலை முழுவதுமே பெயர்ந்து குண்டும் குழியுமாக சேரும் சகதியும் ஜல்லிக்கற்களுடன் சாலை காட்சியளிக்கிறது.
இதனால் கடந்த 15 ஆண்டுகளாக தினமும் ஒரு வாகன ஓட்டியாவது சாலையில் கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருவதே தொடர்கதையாகி வருகிறது. மேலும் மழைக்காலங்களில் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் இந்த சேற்றில் பல வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் பொதுமக்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் பலர் ஜல்லிக்கற்களில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து உள்ளனர்.
மேலும் கத்திரிப் பள்ளியில் இருந்து நெடுசாலை கிராமத்திற்கு இந்த 3 கிலோ மீட்டர் சாலையை கடக்க 30-45 நிமிடங்கள் ஆகிறது.
மேலும் இந்த சாலை பராமரிப்பு குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் ெதரி வித்தனர்.
மேலும் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்கு வர முடிவதில்லை. விபத்து நேர்ந்தாலும், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை சாலையில் அழைத்து செல்ல மிகவும் அச்சப்படு வதாக இப்பகுதி கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலையில் மழை காலங்களில் சேரும் சகதியுமாக உள்ளதால் கிராம மக்கள் தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாகனம் ஓட்டி சென்று வருகின்றனர்.
இந்த சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.
- இதனை நம்பி அவர் ரூ.27.64 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிவக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் பாஸ்கரன். இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பி அவர் ரூ.27.64 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- இதில் இருதரப்பினர்கள் மோதி கொண்டு தாக்கி கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள எம்.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). கூலி தொழிலாளி . அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி துளசி (42).
இந்த நிலையில் ராஜ்குமார் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது துளசி இதுபற்றி தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினர்கள் மோதி கொண்டு தாக்கி கொண்டனர்.
இதில் ராஜ்குமார், துளசி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து இருதரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் கவுதம், வல்லரசு உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில் ஓசூர் பஸ் நிலையத்தில் நேற்று தணிக்கை மேற்கொண்டார்.
- 29 பஸ்களில் பல குரல் காற்று ஒலிப்பான், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், ஓசூர் பஸ் நிலையத்தில் நேற்று தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது, அதிக ஒலி எழுப்பிய வாகனங்களில் 51 பேருந்துகளை தணிக்கை செய்ததில், 29 பஸ்களில் பல குரல் காற்று ஒலிப்பான், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டன.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- அனைத்து கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயனடைவார்கள். இப்பயிற்சி காலத்தின்போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகை வழங்கப்படும்.
ஓசூர்,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ரூ. 34 கோடியே 65 லட்சம் மதிப்பில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தில் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்து, தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டனர்.
பின்னர் கலெக்டர் சரயு கூறியதாவது:-
"இந்த கட்டிடம், 10,569 சதுர அடி பரப்பளவிலான தரைதளத்தில்9 எந்திரங்களுடன் கூடிய தொழி ழ்்தடம், அலுவலர்கள் அறை, 4 வகுப்பறைகள், ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிவறைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் வசதியாக மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது மற்றும் கட்டிடத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய தொழில் நுட்ப மையத்தில் நவீன தொழிற்பிரிவுகள், உயர்தர தொழிற்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்த பயிற்சி மையத்தில் மத்திய மற்றும் மாநில அரசு அங்கீகாரம் பெற்ற 23 குறுகிய கால நவீன பயிற்சிகள் போன்றவையும் வழங்கப்படவுள்ளது.
இதன்மூலம் அனைத்து கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயனடைவார்கள். இப்பயிற்சி காலத்தின்போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகை வழங்கப்படும்.
இதைத்தவிர விலையில்லா பாடப்புத்தகம் விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிக்கணினி, சீருடை, சைக்கிள், பஸ் பயண அட்டை மற்றும் விலையில்லா ஷூ, ஆகியவை வழங்கப்படும்.
அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000- கூடுதலாக உதவித்தொகை கிடைக்கும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல பயிற்சி இணை இயக்குனர் ராஜகோபாலன், தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஜெகநாதன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தனிப்படை அமைக்கப்பட்டு, ெகாள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
- மாவீரன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பத்தலபள்ளி, பிருந்தாவன் நகர், பஸ்தி மற்றும் பேரிகையில் பட்டப்பகல் மற்றும் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போன்கள் கொள்ளை போன சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொத்தம் 4 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதுதொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ெகாள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 4 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு இதில் தொடர்புடைய, ஓசூர் அருகே புக்க சாகரத்தை சேர்ந்த மாதேஷ், பால்ராஜ், சின்ன தின்னூரை சேர்ந்த விஜயகுமார், உத்தன பள்ளி லோகேஷ் மற்றும் தருமபுரி மாவட்டம், ஏ.கொல்லப்பள்ளியை சேர்ந்த மாவீரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட கொள்ளை கும்பலிடம் இருந்து சுமார் 21 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போன்கள் மீட்கப்பட்டன.
கைதான அவர்கள் 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






